/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: மண்ணும், மனிதனும் மகிழ்ந்திடும் திருநாள்!
/
கவிதைச்சோலை: மண்ணும், மனிதனும் மகிழ்ந்திடும் திருநாள்!
கவிதைச்சோலை: மண்ணும், மனிதனும் மகிழ்ந்திடும் திருநாள்!
கவிதைச்சோலை: மண்ணும், மனிதனும் மகிழ்ந்திடும் திருநாள்!
PUBLISHED ON : ஜன 11, 2026

பொங்கும் பொங்கலும் பொங்கிடும் மண் வாசனையும்பொங்கி எழும் வையகத்தில் மகிழ்ந்திடும் பொங்கல் திருநாள்!
எழுந்து வரும் சூரிய தெய்வமகன் வாழ வைக்கும் நம் மனித குலத்தை மஞ்சளும் கரும்பும் போற்றிடும் நாள் வணங்கி வழிபடும் தைத்திருநாள்!
* அழகு தரும் சிறப்புக் கோலங்கள் அடுக்காக மாவிலைத் தோரணங்கள் அன்பில் இணையும் மனங்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் தைத் திருநாள்!
இன்பம் பொங்கும் துன்பம் மறையும் மங்களம் பெருகும் மாசுக்கள் அகலும் வீரம் விளையும் பயம் விலகும் இந்த திருநாளில் எல்லாம் நிகழும்!
* சிந்தையில் நல்லெண்ணம் கூடும் நடத்தையில் ஒழுக்கம் பேணும் உழைப்பில் உன்னதம் காணும் செயல் ஏற்போம் தைத்திருநாளில்!
* ஏழ்மை அகலும் மனிதம் காப்போம் பகைமை வீழும் வலிமை படைப்போம் வளமை காணும் புதுமை செய்வோம் இந்த திருநாளில் சபதம் ஏற்போம்!
* வேற்றுமை எண்ணம் களையட்டும்ஒற்றுமை கரங்கள் இணையட்டும் பானையில் பொங்கல் பொங்கட்டும் இல்லம் மகிழ்ந்திடும் தைத்திருநாள்!
* உதய பொழுதின் உற்சாகம்உழவுத் தொழிலே ஆதாரம் அவன் கையில் வையகம் உழவனுக்கே இந்நாளில் யாவும்!
* உழவன் வாழ்வில் குடி சிறக்கும் மண் வளத்தில் பசுமை செழிக்கும் விவசாயம் பசிப்பிணி போக்கும் மனதில் பதிந்தால் தரணி வளமாகும்!
* விவசாயியின் உற்ற தோழன் நீ வீரத்தின் அடையாளமும் நீ இன்றைய திருநாள் உனது அன்றோ மாட்டு பொங்கல் சிறக்கட்டும் நன்றே!
* புனிதத் திருநாள் வந்தது நமக்கு உழவுத் திருநாள் வந்தது மண்ணுக்கு நிலத்தில் வாழும் நம் வாழ்விற்கு என்றும் தலை வணங்கு உழவனுக்கு!
- வி.சுவாமிநாதன், சென்னை. தொடர்புக்கு: 93603 83220.

