PUBLISHED ON : பிப் 01, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறவுகளில்
குறையில்லை என்றால்
பாசமும்
நிலையாக இருக்கும்!
நட்பில்
குறையில்லை என்றால்
துணையும்
எப்போதும் கிடைக்கும்!
அன்பில்
குறையில்லை என்றால்
இல்லறமும்
இனிமையாய் அமையும்!
கல்வியில்
குறையில்லை என்றால்
ஞானமும்
ஆழமாக வேரூன்றும்!
பேச்சில் குறையில்லை என்றால்
மரியாதையும்
தானே உயரும்!
உடலில்
குறையில்லை என்றால்
ஆரோக்கியமும்
நீடித்து நிலைக்கும்!
உழைப்பில்
குறையில்லை என்றால்
உயர்வும்
உறுதியாய் வரும்!
முயற்சியில்
குறையில்லை என்றால்
வெற்றியும்
தானாக சேரும்!
- டி.எல்.குமார், விழுப்புரம்.

