sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: வாரமலர் எனும் வாடாமலர்!

/

கவிதைச்சோலை: வாரமலர் எனும் வாடாமலர்!

கவிதைச்சோலை: வாரமலர் எனும் வாடாமலர்!

கவிதைச்சோலை: வாரமலர் எனும் வாடாமலர்!


PUBLISHED ON : பிப் 08, 2026

Google News

PUBLISHED ON : பிப் 08, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படித்தவுடன் மூடி மூலையில் போடுவதற்கு காமிக் புத்தகமல்ல - அது வைத்து காக்க வேண்டிய வைரக்கல்லுக்கு ஈடானது!

படித்தவுடன்எடைக்கு போட்டு காசாக்க வெற்று காகிதமல்ல - அது தலையில் தரித்து கொள்ளும் தங்க கிரீடத்திற்கு இணையானது!

படித்தவுடன் உதறி விட்டு போவதற்கு உதிரி பூக்களல்ல - அது அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து வைக்கும் பொக்கிஷம்!

ஏதோ ஒரு மூலையில் நால்வருக்கு மத்தியில் நடந்து முடியும் விவாத மேடையல்ல - அது எல்லா வினாக்களுக்கும் விடை தரும் தகவல் களஞ்சியம்!

வாரமலரின் சாதனைகள் வரலாற்று பக்கங்கள் அல்ல - அது சந்தோஷத்தை அள்ளி தரும் வாசகர்களின் உள்ளங்களில்!

அறிவுப்புதையல்களை அவ்வப்போது அள்ளித்தரும் அட்சயபாத்திரம் - அது அறிவு பசி துாண்டி அகிலமெல்லாம் ஆணி வேர் விட்டு வளர்ந்த ஆலமரம்!

ஆண்டிற்கு ஒரு முறை வார்த்தைகளை தாங்கி வரும் வாழ்த்து அட்டை அல்ல - அது ஆண்டுகள் பல கடந்தும் வாகைசூடவாரா வாரம் இல்லந்தோறும் வாசலில் பூக்கும் நேசமலர்... நம் எண்ணங்களை தேசம் தோறும் எடுத்துச் செல்லும் வாடாமலர்!

அது, மழைக்காலத்தில் தோன்றி மறையும் வானவில் அல்ல! அறிவுக்கு விருந்தாகும் குறள் போல் எட்டுத்திக்கும் எழுச்சியோடு பறக்கும் பத்திரிகைக்கொடி!

வாசகர்களின் எண்ணங்களாய் வாசல் தோறும் வலம் வந்து செல்லட்டும்... அது, அறிவு தேனுாட்டி நாளைய தலைமுறை வாசகர்களுக்கும் வரம் தந்து வெல்லட்டும்!

- எஸ்.ராஜமோகன், குல்லுார்ச்சந்தை, விருதுநகர்.தொடர்புக்கு: 82202 12189.






      Dinamalar
      Follow us