PUBLISHED ON : மார் 22, 2026

எதிர்பாராததைத் தருவதுதான்
எதிர்காலம் என்பதை
மறந்துவிடாதீர்கள்...
நீங்கள் நிகழ்காலத்தில்
உழைப்பை செலுத்திடுங்கள்!
திருப்பங்கள் நிறைந்ததுதான்
வாழ்க்கை என்பதை
மறந்துவிடாதீர்கள்...
நீங்கள் முயற்சியில்
கவனத்தை செலுத்திடுங்கள்!
படிப்பினை வழங்குவதுதான்
தோல்விகள் என்பதை
மறந்துவிடாதீர்கள்...
நீங்கள் முன்னேற்றத்தில்
நாட்டத்தை செலுத்திடுங்கள்!
விரும்பியதை கொடுப்பதுதான் விடாமுயற்சி என்பதை
மறந்துவிடாதீர்கள்...
நீங்கள் லட்சியத்தில்
ஆர்வத்தை செலுத்திடுங்கள்!
வெற்றியை அளிப்பதுதான்
தன்முனைப்பு என்பதை
மறந்துவிடாதீர்கள்...
நீங்கள் திறமைதனில்
நம்பிக்கையை செலுத்திடுங்கள்!
வாய்ப்பை உருவாக்குவதுதான்
துணிச்சல் என்பதை
மறந்துவிடாதீர்கள்...
நீங்கள் பயணத்தில்
வேகத்தை செலுத்திடுங்கள்!
உயர்வினைத் தருவதுதான்
பொறுமை என்பதை
மறந்துவிடாதீர்கள்...
நீங்கள் வாழ்நாளில்
நிதானத்தை செலுத்திடுங்கள்!
மகிழ்ச்சியை அளிப்பதுதான்
மனத்துாய்மை என்பதை
மறந்துவிடாதீர்கள்...
நீங்கள் எல்லாரிடத்திலும்
அன்பினை செலுத்திடுங்கள்!
- வ.முருகன், விழுப்புரம். தொடர்புக்கு: 97156 40263

