PUBLISHED ON : மே 31, 2026

நீங்கள் துாங்குகிறீர்கள்
என்பதற்காக
எல்லாரும் துாங்குவரா?
நீங்கள் அழுகிறீர்கள்
என்பதற்காக
எல்லாரும் அழுவரா?
நீங்கள் சிரிக்கிறீர்கள்
என்பதற்காக
எல்லாரும் சிரிப்பரா?
நீங்கள் படிக்கிறீர்கள்
என்பதற்காக
எல்லாரும் படிப்பரா?
நீங்கள் கொடுப்பதில் வள்ளல்கள்
என்பதற்காக எல்லாரும்
வள்ளல் ஆவரா?
நீங்கள் கஞ்சன்
என்பதற்காக எல்லாரும்
கஞ்சனாக ஆவரா?
நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்
என்பதற்காக
எல்லாரும் ஏமாற்றுவரா?
நீங்கள் ஏமாந்தவர்கள்
என்பதற்காக
எல்லாரும் ஏமாந்தவர் ஆவரா?
நீங்கள் கடன் வாங்குகிறீர்கள்
என்பதற்காக எல்லாரும்
கடன் வாங்குவரா?
நீங்கள் நட்பை முறித்தால்
எல்லாரும்
நட்பை முறிப்பரா?
இப்படி ஓராயிரம் கேள்விகள்
கேட்டுக்கொண்டே போகலாம்!
நாம் அனைவருமே நடிகர்கள் தான்
ஒருவர் மனதில் நினைப்பதை
மற்றவர் அறியாதவரை...
பிடிக்காதவர்களை கண்டால்
பிடித்த மாதிரி நடப்பது தான் சிறப்பு!
எல்லாமே மாயை தான்
இருக்கும் வரை...
கடந்து செல்லுங்கள்
நம் வாழ்க்கை நம் கையில்!
- வ.மாரி சுப்பிரமணியன், மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம். தொடர்புக்கு: 98403 13651
