PUBLISHED ON : ஜூன் 14, 2026

அ நிறம் | அளவு
சிந்தனையில்
குறையில்லை என்றால்
தெளிவும்
தேடிவரும்!
நம்பிக்கையில்
குறையில்லை என்றால்
துணிச்சலும்
துணையாக நிற்கும்!
உண்மையில்
குறையில்லை என்றால்
உயர்வு
உன்னைத்தேடி வரும்!
பண்பினில்
குறையில்லை என்றால்
பெருமையும்
தானே சேரும்!
பொறுமையில் குறையில்லை என்றால்
வெற்றியும்
நிச்சயமாகும்!
நேர்மையில்
குறையில்லை என்றால்
நிம்மதியும்
நிலைத்திருக்கும்!
பார்வையில்
குறையில்லை என்றால்
உலகமும்
அழகாய் தோன்றும்!
வாழ்க்கையில்
குறையில்லை என்றால்
மகிழ்ச்சியும்
மழைபோல் பொழியும்!
- ரேணுகா நாராயணன், சென்னை.
தொடர்புக்கு: 9360030032
