தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: வழிகாட்டுபவனாய் வாழு!

கவிதைச்சோலை: வழிகாட்டுபவனாய் வாழு!

கவிதைச்சோலை: வழிகாட்டுபவனாய் வாழு!


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெற்றிகள் வேண்டுமா

முயற்சிப்பவனாய் வாழு...

நன்மைகள் வேண்டுமா

நல்லவனாய் வாழு!

நற்பெயர் வேண்டுமா

நேர்மையாளனாய் வாழு...

நம்பிக்கை வேண்டுமா

துணிவானவனாய் வாழு!

மகிழ்ச்சி வேண்டுமா

பண்பாளனாய் வாழு...

மன அமைதி வேண்டுமா

அடக்கமுள்ளவனாய் வாழு!

வளர்ச்சி வேண்டுமா

உழைப்பாளனாய் வாழு...

நிலைத்த உறவு வேண்டுமா

உண்மையானவனாய் வாழு!

ஆரோக்கியம் வேண்டுமா

சுறுசுறுப்பானவனாய் வாழு...

சிறப்புற வேண்டுமா

சிந்தனையாளனாய் வாழு!

சாதனைகள் வேண்டுமா

சோர்வில்லாதவனாய் வாழு...

இடர்கள் நீங்க வேண்டுமா

அச்சமற்றவனாய் வாழு!

பாராட்டுகள் வேண்டுமா

விவேகமுள்ளவனாய் வாழு...

இலக்கை அடைய வேண்டுமா

உறுதியுள்ளவனாய் வாழு!

புகழ்ச்சி வேண்டுமா

பக்குவமுள்ளவனாய் வாழு...

தலைமை இடம் வேண்டுமா

வழிகாட்டுபவனாய் வாழு!



- எஸ்.வி.ராஜசேகரன், மதுரை. தொடர்புக்கு:98651 07396

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us