தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: வரம் பெற்ற தலைவன்!

கவிதைச்சோலை: வரம் பெற்ற தலைவன்!

கவிதைச்சோலை: வரம் பெற்ற தலைவன்!

1


PUBLISHED ON : ஜூலை 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 15 - காமராஜர் பிறந்த நாள்!

படிக்காமல் மேதையாக முடியும் என

உலகறிய வைத்த

தலைவன்!

ஊருக்கு உழைத்து

உறவுகளை வளர்த்த

தலைவன்!

வியர்வை சிந்தி

உழைத்தாலும்

விளம்பரம்

தேடாத தலைவன்!

வேண்டுதல்களை கேட்டு

ஆகட்டும் பார்க்கலாம்

என அனுசரணை

தந்த தலைவன்!

படிக்க வா

சாப்பாடு தருகிறேன்

என பசியாற்றி

கல்வி தந்த தலைவன்!

வாழ்ந்த நாளில்

பிறர் வாழ

உழைத்த

உத்தம தலைவன்!

நாடும் மக்களுமே

சொந்தம் என

சொத்துகள் சேர்க்காத

சொக்க தங்க தலைவன்!

இத்தனையும் ஒருங்கே

பெற்ற தலைவன் யாரென்றால்

காமராஜர் என

நினைவுக்கு வருவதே - அந்த

தலைவன் பெற்ற வரம்!



- அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டம். தொடர்புக்கு: 9976679612

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us