தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: அன்பால் பலப்படுத்திடு!

கவிதைச்சோலை: அன்பால் பலப்படுத்திடு!

கவிதைச்சோலை: அன்பால் பலப்படுத்திடு!


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 2 - நண்பர்கள் தினம்

மனிதப் பிறவியின்

மாபெரும் பொக்கிஷம் நட்பு

வாழ்க்கையில் கிடைக்கும்

மேலான சொத்து நண்பர்கள்!

நல்ல நண்பன் கிடைத்தால்

தொடுவாய் வெற்றிக்கோட்டை

நட்பின் துணையிருந்துவிட்டால்

உலகத்தை அசைத்துப் பார்க்கலாம்!

நட்பின் ஆழம் அளவிட முடியாதது

அது சமுத்திரம் போல எல்லையற்றது

பகிர்ந்து கொள்வதில் மகிழ்ந்து

தியாகம் புரிவதில் உயர்ந்து நிற்பது!

நண்பன் வழிகாட்டினால்

எந்தப் பாதையிலும் வலம் வரலாம்

நட்பு உறுதுணையானால்

எவர் எதிரிலும் நடையிடலாம்!

நண்பன் இருளில் ஒளியாவான்

அச்சம் நம்மை நெருங்காது

நட்பு தன்னம்பிக்கையை நிறைத்து

வாழ்நாளை அழகாக்கும்!

நல்ல நண்பன் கண்ணாடி போல

துணிவோடு உள்ளதை உரைப்பான்

தவறுகளைத் திருத்தி நேர்வழியில்

புகழ் பெற்றிட அழைத்துச் செல்வான்!

நண்பர்கள் இல்லா வாழ்க்கை

வெறுமையின் வெளியாகிவிடும்

புரிதலான நட்பு மலர்ந்துவிட்டால்

இப்பூமியே பூஞ்சோலையாகும்!

நட்பென்பது அரிதான புதையல்

இதயத்தில் வைத்து பாதுகாத்திடு

அன்பாலும் நம்பிக்கையாலும்

என்றும் அதனை பலப்படுத்திடு!

- பொ.தினேஷ்குமார், காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us