PUBLISHED ON : ஆக 23, 2026

தோல்வி என்றால் நீங்கள்
தோற்றவர் என்று பொருள் அல்ல...
நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை
என்று பொருள்!
தோல்வி என்றால், நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல...
சில பாடங்கள் கற்றுக்கொண்டு
இருக்கிறீர்கள் என்று பொருள்!
தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாகப் பொருள் இல்லை...
முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம்
உள்ளது என்று பொருள்!
தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு
இல்லை என்று பொருள் அல்ல...
வேறு உத்திகளைக் கையாள
உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்!
தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை...
மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு
கிடைத்துள்ளது என்று பொருள்!
தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல... இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்!
தோல்வி என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள் அல்ல...
அடையக் கொஞ்சம் தாமதமாகலாம்
என்று பொருள்!
தோல்வி என்றால் கடவுள் உங்களைக்
கைவிட்டு விட்டார் என்று பொருள் இல்லை...
உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்!
- ர.புவனேஸ்வரி, பெங்களூரு.
