தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: முதல் அடி எடுத்து வை!

கவிதைச்சோலை: முதல் அடி எடுத்து வை!

கவிதைச்சோலை: முதல் அடி எடுத்து வை!


PUBLISHED ON : செப் 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிற்கிற இடத்துலயே

நின்று கொண்டு இருந்தால்

போக வேண்டிய இடத்திற்கு

போய் சேர முடியாது!

தயக்கம் ஒரு சங்கிலி அதை உடைத்தெறி பயம் ஒரு கதவு அதை திறந்திடு!

தைரியமாக முதல் அடியை எடுத்து வைமீதியை பாத்துக்கொள்ளும் உனது திறமை!

குழந்தை நடக்கும் போதுவிழுந்து விடுவோம் என தயங்குகிறதா விழும் அழும் மறுபடியும் எழுந்து நடக்கும்!

அது கற்றுக்கொண்ட பாடத்தை நீயும் மறந்துவிடாதே இப்போது நீ குழந்தையாய் மாறி முதல் அடியை எடுத்து வை!

விழுந்தால் என்ன எழுந்திருக்க கற்றுக்கொள் பல முறை விழுந்துஒரு முறை நட அதுதான் வெற்றி!

உன்னால் எதுவும் முடியும் என்று நம்பு அந்த நம்பிக்கை தான் முதல் அடி!

நாளை என்று சொன்னால் நாளும் ஓடிவிடும் வாரம் என்று சொன்னால் ஆண்டும் ஓடிவிடும்!

நல்ல தருணம் என்று தனியாக எதுவும் இல்லை இந்த நிமிடத்திலேயே முதல் அடியை எடுத்து வை!

வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றிக்கும்அடித்தளமாகிறது நீ எடுத்து வைக்கும் முதல் அடி!

- கே.ஆர். அசோகன், ஈரோடு.தொடர்புக்கு :99424 45508

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us