தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: அழகான வெற்றி!

கவிதைச்சோலை: அழகான வெற்றி!

கவிதைச்சோலை: அழகான வெற்றி!


PUBLISHED ON : அக் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடாமுயற்சியின் விரல் பிடித்து

வீதிக்கு வாருங்கள் - அது

சிவப்புக் கம்பளம் விரித்து

சிம்மாசனத்தில் அமர வைக்கும்!

தன்னம்பிக்கையின் கால் ஊன்றி

தலைநிமிர்ந்து நில்லுங்கள் - அது

ஆகாயத்தைச் தாண்டிச் செல்லும்

அற்புத சக்தி தரும்!

பொறுமையின் பாதம் தாங்கி

பூமியில் நடமாடுங்கள் - அது

நெருக்கடிகளின் வேர் அகற்றி

நெஞ்சுக்கு நிம்மதி தரும்!

ஒழுக்கத்தின் கரம் கொண்டு

ஒய்யாரமாய் நடைபோடுங்கள் - அது

கோபுரத்தின் உச்சியில் ஏற்றி

கோள்களையே வணங்க வைக்கும்!

குறிக்கோளின் தோள் கொண்டு

குருதி சிந்தப் பாடுபடுங்கள் - அது

உலகத்தின் வெளி எங்கும்

ஊர்வலமாய் கொண்டு சேர்க்கும்!

துணிவின் மாண்பு கொண்டு

துடிப்புடன் செயல்படுங்கள் - அது

விருப்பங்களை நிறைவேற்றி

வீறுநடை போட வைக்கும்!

உண்மையின் நாவைக் கொண்டு

உள்ளத்தைத் திறந்திடுங்கள் - அது

உறவுகளின் வலிமை சேர்த்து

உதவியாய் ஓடி வரும்!

இரக்கத்தின் கண் கொண்டு

இயற்கையை நோக்கிடுங்கள் - அது

காலம் உள்ளவரைக்கும்

கனிவுடன் நினைவு கூறும்!

புன்னகையின் இதழ் விரித்து

பூரிப்புடன் உரையாடுங்கள் - அது

மகிழ்ச்சியின் முகவரியாய்

மனங்களில் இடம் பிடிக்கும்!

உழைப்பின் மூச்சைக் கொண்டு ஊக்கமாய் முயற்சியுங்கள் - அது

அதிசயங்களின் அணிவகுப்பாய்

அழகழகான வெற்றிகள் தரும்!



- ஜா. துரைசிங்கம், சென்னை. தொடர்புக்கு: 95512 51168

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us