தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: இனிதாக போற்றி வரவேற்போம்!

கவிதைச்சோலை: இனிதாக போற்றி வரவேற்போம்!

கவிதைச்சோலை: இனிதாக போற்றி வரவேற்போம்!


PUBLISHED ON : நவ 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ., 8 - தீபாவளி!

அன்பு நிறை இல்லங்களில்

ஆனந்தம் பொங்கும் தீபாவளியை

உறவுகள் எல்லாம் ஒன்றுகூடி

உள்ளம் மகிழும் நன்னாளை

பகைமை மறந்து பாசம் வளர்க்கும்

உன்னதமான திருநாளை

இனிதாகப் போற்றி வரவேற்போம்!

இருள் விலகி

ஒளியேற்றும் தீபாவளியை

வேற்றுமைகள் பலவற்றை

மறக்கச் செய்யும் பொன்னாளை

பகிர்ந்துண்டு வாழச் செய்யும்

மனிதநேயப் பண்டிகையை

இனிதாகப் போற்றி வரவேற்போம்!

ஏழைகள் மனதில்

மகிழ்ச்சி சேர்க்கும் தீபாவளியை

ஏங்கும் உள்ளங்களில்

நம்பிக்கை விதைக்கும் நாளை

ஏற்றத் தாழ்வுகள் இல்லாத

சிறந்த சமத்துவ திருநாளை

இனிதாகப் போற்றி வரவேற்போம்!

மிகுந்த பட்டாசு ஒலியை விட

வாழ்த்துக்கள் ஓங்கி ஒலிக்கட்டும்

சுற்றுப்புற இரைச்சல் விலகி

எங்கும் இன்பம் மலரட்டும்

பாதுகாப்பான பண்டிகையாகி

அனைவரும் மகிழ்ந்திட

இனிதாகப் போற்றி வரவேற்போம்!

புகையில்லா வானம் காணும்

மாசற்ற தீபாவளியை

சூழல் காக்கும் பொறுப்புணர்வு

நிறைய வேண்டிய நாளை

தலைமுறை தலைமுறையாய்

மகிழ்ச்சி பரப்பும் விழாவை

இனிதாகப் போற்றி வரவேற்போம்!

ஒவ்வொரு வீட்டிலும் ஒளியேற்றி

உள்ளம் அனைத்திலும் உவகையூட்டி

நெஞ்சங்களில் நல்லெண்ணம் பூட்டி

எல்லார்க்கும் நல்வாழ்வு கிடைத்திட

பிரிவினை எல்லாம் மறந்து

மகத்தான ஒற்றுமை நிலைத்திட

இனிதாகப் போற்றி வரவேற்போம்!

—  வெ.பாலமுருகன், திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us