PUBLISHED ON : நவ 29, 2026

அ நிறம் | அளவு
எண்ணும்
நம் எண்ணங்கள்
நல் வண்ணங்களாக
நாள்தோறும் மாற வேண்டும்!
மண்ணும்
இந்த விண்ணும்
பொன் விளையும்
பூமியாக பூக்க வேண்டும்!
சூலாயுதமும்
அவன் வேலாயுதமும்
நம் வேதனைகளை
வீழ்த்தி வேரறுக்க வேண்டும்!
போராட்டமும்
அந்த தேரோட்டமும்
நம் தேவைகளை
பூர்த்தியாக்க வேண்டும்!
வேண்டலும்
இனிய தீண்டலும்
நம் உலகை
உல்லாசமாக்க வேண்டும்!
சாத்திரங்களும்
சர்வ சூத்திரங்களும்
நம் சந்தோஷத்தை
சரித்திரமாக்க வேண்டும்!
பூக்களும்
நல் பாக்களும்
நம் பண்பாட்டை
பாரறியச் செய்ய வேண்டும்!
தேவைகளும்
நல் சேவைகளும்
நம் சமுதாயத்தை
சந்தோஷமாக்க வேண்டும்!
மனங்களும்
நம் இனங்களும்
நல் மாற்றங்கள்
மாறி மாறி நிகழ்த்த வேண்டும்!
இயற்கையும்
நம் இறைவனும்
நல் இன்பங்களால்
இவ்வுலகை இயக்க வேண்டும்!
- க. அழகர்சாமி, கொச்சின், கேரளம். தொடர்புக்கு: 94954 67076.
