
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேமியா அல்லது ஜவ்வரிசிப் பாயசம் செய்யும் போது, பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சூடு ஆறியதும் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்தால், பாயசம் நீர்த்துப் போகாமல் இருக்கும்
* கட்டிப் பெருங்காயத்தை நறுக்குவதற்கு, கடைகளில் கிடைக்கும் பாக்கு வெட்டி வாங்கி வைத்து கொள்ளலாம். பெருங்காயம் இளகி இருக்கும் போதே சிறிய துண்டுகளாக்கி, சிறிது அரிசி மாவு அல்லது கோதுமை மாவு கலந்து நிழலில் உலர்த்தி, எடுத்து வைத்தால், பயன்படுத்த சுலபமாக இருக்கும்
* முந்திரியில் உள்ள தாமிரச்சத்து, தலை முடியின் நிறத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது
* அன்னாசி பழத்தில் மக்னீஷிய சத்து அதிகம் இருக்கிறது. எலும்புகள் வலுவடையவும், அதைச் சார்ந்துள்ள தசைகள் வலுவடையவும் அடிக்கடி சாப்பிடலாம்.

