
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எவ்வளவு விலை உயர்ந்த பருத்தி துணி என்றாலும், சிறிதளவு நீரில் நனைக்கும் போது சுருங்கவே செய்யும். எனவே, பருத்தி துணிகளை வாங்கியதும் அதை தைக்கும் முன் தண்ணீரில் நனைத்தெடுத்து காய வைத்து, அதன்பின் தைத்தால், கடைசி வரையில் துணிகள் தைத்த அளவுடன் இருக்கும்
* குழந்தைகள் பிறந்தவுடன் வாங்கும் சிறிய மெத்தைகள், நாளடைவில் பயனில்லாமல் போய் விடும். அவற்றை அப்படியே மடித்து தைத்து, ஒரு கவரும் போட்டு விட்டால், ரயில் பிராயணத்தின் போது எடுத்துச் செல்ல இலகுவான தலையணை தயார்
* பொதுவாக கடைகளில் வெண்ணெய் வாங்கி வந்து காய்ச்சும் போது, நல்ல தண்ணீரில் வெண்ணெயை அரை மணி நேரம் போட்டு வைத்து, பின் காய்ச்சினால் சுத்தமாக இருப்பதுடன், நெய் மணமாக இருக்கும்
* புழுங்கல் அரிசியை வறுத்து பொடியாக்கி, கூட்டு, பொரியலில் துாவினால் சுவையாக இருக்கும்.

