
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எலுமிச்சை சாதம் தயாரிக்கும் போது, வேர்க்கடலையுடன் ஒரு கைப்பிடி அவித்த கடலை சுண்டலையும் சேர்த்து தாளித்து, சாதத்தில் கலந்தால், கூடுதல் சத்துடன் அருமையாக இருக்கும்
* பருப்பு உசிலி செய்ய, பருப்பை நன்கு களைந்து நீரை வடித்து, இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் அத்துடன் மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். பூப்போல சூப்பரான பருப்பு உசிலி நொடியில் தயார்
* இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்புடன், வெந்தயம் சேர்த்து வேகவிட்டு அரைத்து எடுத்து, மதியம் சாப்பிடும் போது, இரண்டு தேக்கரண்டி போட்டு, 40 நாட்கள் சாப்பிட, சர்க்கரை நோய் படிப்படியாக குறையும்
* தேயிலை துாளுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால், தேநீர் தயாரிக்கும் பாத்திரத்தில் கறை படியாது.

