
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காயவைத்த புதினா இலைப் பொடியுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர பல் கூச்சம் நீங்கும்
* பார்லி தானியத்தை, நான்கு தேக்கரண்டி எடுத்து வெறும் வாணலியில் வறுத்து, இரண்டு கப் நீர் விட்டுக் கொதிக்க வைத்து பாதியாகக் குறைந்ததும் வடிகட்டி, நீரைப் பருக உடல் குளிர்ச்சியடையும். நீர்க்கடுப்பு விலகும். கர்ப்பிணிப் பெண்களில் சிலருக்குப் பாதத்தில் நீர்கோத்து வீங்கிவிடும். அதற்கு பார்லி தண்ணீரை, இரு வேளை வெறும் வயிற்றில் குடிக்க, வீக்கம் சரியாகும். தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும்
* சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சு வெல்லம் சேர்த்து மென்று சாப்பிட, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ரத்தச் சிவப்பணுக்கள் அதிகரிக்கும்.

