தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சப்போட்டா பழத்தின் சதைப் பகுதியை புளிப்பில்லாத தயிருடன் கலந்து சாப்பிட்டால் அடி வயிற்றுவலி மற்றும் மாதவிடாய் வலி நீங்கும். சப்போட்டா இலையுடன் மஞ்சள் துாள், உப்பு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால், பல் வலி, வாய் துர்நாற்றம் நீங்கும்

* சீரகத்தை வறுத்து அரைத்த பொடி அரை தேக்கரண்டி, பெருங்காயம் வறுத்து அரைத்ததில் அரை தேக்கரண்டி மற்றும் பனங்கற்கண்டு ஆகிய மூன்றையும் ஒன்றாக, 200 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால், அஜீரணம், வயிற்று வலி மற்றும் பசியின்மை சரியாகும்

* வேப்பம்பூவைத் தேனில் ஊறவைத்து தினமும் இரவு உறங்கச் செல்லும் முன், ஒரு தேக்கரண்டி சாப்பிட, உடல் வலிமை பெறும்

* கடலை மாவையும், கோதுமை மாவையும் சரிசமமாக எடுத்து நன்கு சலித்து காய்ச்சிய பாலை சேர்த்து, 'பேஸ்ட்' போல் தயாரிக்கவும். இந்தக் கலவையை முகம், கை, கால்களில் பூசிக் குளித்தால் சருமம் மிருதுவாகும்

* முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் சந்தனம், மிளகு மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றை அரைத்துப் பூசிவர, பருக்கள் மறைந்து விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us