PUBLISHED ON : ஜூலை 05, 2026

* கரிசலாங்கண்ணிக் கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும். இரவு வேளையில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது
* ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, இரண்டு லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும்
* தொண்டை வலி, கரகரப்புக்கு அதிமதுரத் துாள் ஒரு தேக்கரண்டி எடுத்து வாயில் போட்டு, பொறுக்கும் சூட்டில், வெந்நீர் சிறிது சிறிதாக குடிக்க, தொண்டை பிரச்னை நீங்கும். வாய்ப்புண் இருந்தாலும் சரியாகும்
* கசகசாவை நைசாக அரைத்து, குழந்தையின் தொப்புளை சுற்றி பூசினால், குழந்தை அழுகையை நிறுத்தி விடும்
* இஞ்சியை அரைத்து வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து வைத்தால், தெளிந்து விடும். தெளிந்த நீரை முடியின் வேர் காலில் படும்படி பூசி, அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்க, பொடுகு, பேன் மற்றும் அரிப்பு போகும்
* பெண்களுக்கு உதட்டின் மேல், முடி மீசை போல இருக்கும். கஸ்துாரி மஞ்சளையும், கோரைக் கிழங்கையும் கலந்து பொடி செய்து, தொடர்ந்து பூசிக் குளித்து வர, உதட்டின் மேல் உள்ள முடி போய் விடும்.
