/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து: வாழைத்தண்டு!
/
நம்மிடமே இருக்கு மருந்து: வாழைத்தண்டு!
PUBLISHED ON : டிச 14, 2025

* வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும், குடலில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது. இதன் சாற்றை இரண்டு அல்லது மூன்று, 'அவுன்ஸ்' வீதம் தினமும் அருந்தினால், வறட்டு இருமல் நீங்கும்
* நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டு சாறு ஒரு டம்ளர் குடித்தால், விஷம் தானாக இறங்கி விடும்.
* வாழைத் தண்டை சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தணியும்
* வாழைத் தண்டை சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து, தீப்புண் மேல் பூசி வர, தீப்புண் ஆறும். சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். இதன் பூவை பொரியல் செய்து உண்பதால் அஜீரணம், நீரிழிவு நோய் நீங்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்றுப் புழுக்களை ஒழிக்கும் திறன் கொண்டது. பித்த நோய்களையும், இருமலையும் நீக்கும்
* வாழைப்பூச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால், கை கால் எரிச்சல், வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும்
* வாழைத் தண்டில் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருட்களும், வைட்டமின் பி, சி ஆகிய சத்துகளும் உள்ளன. கண் பார்வை நரம்புகளில் தேங்கி நிற்கும் உப்பு படிவங்கள் நீங்கி, பார்வையை தெளிவடையச் செய்யும். வாழத்தண்டு சாறு, நரம்பு மண்டலத்தை துாண்டி சுறுசுறுப்பு அடைய செய்யும்
* பித்தத்தை குறைக்கவும் உதவும். மாதம் ஒருமுறை வாழைத்தண்டு, சூப் செய்து அருந்துவது நல்லது. வயது முதிர்ந்த ஆண், பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம், மூட்டு வலி வந்து கை கால்கள் வீங்கி இருந்தால், வாழைத்தண்டு சாறை குடித்தால், மிகுந்த பயனளிக்கும்
* வாழைத்தண்டு காது சம்பந்தமான பிரச்னை, கருப்பை நோய்கள் மற்றும் ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றை குணமாக்கும். வாழைத்தண்டை பொடியாக நறுக்கி, உலர்த்திப் பொடி செய்து, அத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர, காமாலை நோய் குணமாகும். தேள், பூரான் கடித்த இடத்தில், வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை பூச, வலி குறையும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்

