தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: நெல்லிக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து: நெல்லிக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து: நெல்லிக்காய்!


PUBLISHED ON : ஜூன் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வயிற்று வலி மற்றும் வயிறு அழற்சியை குணமாக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு

* நெல்லி இலையை கைப்பிடியளவு நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகும்

* தினம் ஒரு நெல்லிக்காயை சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்

* நெல்லிக்காயுடன், தாமரை இலையின் இதழ்கள் சேர்த்து அரைத்து, உடலில் அடிபட்டு வீங்கிய இடத்தில் பூசினால், வீக்கம் குறைந்து விடும்

* நெல்லிக்காயிலுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலையும், ரத்த சோகையையும் குணப்படுத்தும்

* இளநரை மற்றும் முடிஉதிர்தல் ஆகியவற்றுக்கு, நெல்லிக்காய் சிறந்த நிவாரணி

* நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் காயவைத்தும் சாப்பிடலாம்

* நெல்லிக்காயை காயவைத்து, பவுடராக்கி, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தலையில் தேய்த்தால் முடி உதிராது

* வைட்டமின் சி, வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது

* கருவுற்ற பெண்கள் நெல்லிக்காயை சாப்பிட்டு வர, அதிலுள்ள இரும்புச்சத்து கரு வளர்ச்சிக்கு உதவும்

* நெல்லிக்காயில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய, மூன்று சுவைகள் இருப்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

தொகுப்பு : எம்.செல்லையா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us