தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

1


PUBLISHED ON : நவ 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ ன்புள்ள அம்மாவுக்கு,

நான், 30 வயது பெண். பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனக்கு, இரு தங்கைகள் உள்ளனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். அப்பா, ‘டூ–வீலர்’ உதிரி பாகங்கள் விற்கும் கடை வைத்துள்ளார். அம்மா, இல்லத்தரசி.

எனக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. கணவர், அரிசி வியாபாரம் செய்து வருகிறார். எனக்கு மாமனார் இல்லை. மாமியாரும், 22 வயது நாத்தனாரும் எங்களுடன் தான் உள்ளனர். எனக்கு, இரண்டு வயதில், ஆண் குழந்தை உள்ளது.

புகுந்த வீட்டுக்கு சென்றபோது தான், பல விஷயங்கள் எனக்கு தெரிய வந்தது.

என் கணவருக்கு, 15 லட்ச ரூபாய் கடன் இருக்கிறது. வீடும் அடமானத்தில் தான் உள்ளது. என் நாத்தனார், திடீர், திடீரென கத்துவாள். இரவில், வீட்டை விட்டு, வெளியில் சென்று விடுவாள். என் கணவர் தான் போய் கூப்பிட்டு வருவார். வீட்டிலுள்ள பொருட்களை துாக்கி வீசுவாள். எங்கள் அனைவரையும் சகட்டு மேனிக்கு திட்டுவாள்.

இதெல்லாம் நடந்த சிறிது நேரத்தில், ‘நார்மலாகி’ விடுவாள்; எதுவும் நடக்காதது போல வளைய வருவாள்.

மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை எடுக்க செய்யலாமே என்றால், பிறகு பார்த்துக்கலாம் என்பார், என் கணவர்.

என் கணவருக்கு எல்லா வேலைகளும் அவள் தான் செய்வாள். சாப்பாடு பரிமாறுவது, அவரது துணியை துவைத்து வைப்பது, என்றிருப்பாள். வீட்டில் இருந்தால், என் கணவரும், அவளுடனும், மாமியாருடனும் தான் பேசி, சிரித்துக் கொண்டிருப்பார்.

என்னைப் பார்த்தால், ‘வேறு வேலை இருந்தால் போய் பார்...’ என்று சொல்லி அந்த இடத்திலிருந்து என்னை அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்.

வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டும், குழந்தையை கவனித்து கொள்ளவும் சிரமமாக இருக்க, என் அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். நடந்த விஷயங்களை அறிந்த என் பெற்றோர், ‘தனிக்குடித்தனம் வைப்பதாக இருந்தால், கணவருடன் செல். இல்லாவிட்டால், இங்கேயே இருந்து விடு...’ என்கின்றனர்.

என்னால், என், இரு தங்கைகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்று கவலையாக இருக்கிறது. தங்கைகளோ, ‘உன்னால், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. நிம்மதியாக இங்கேயே இருந்து விடு...’ என்று சமாதானப்படுத்துகின்றனர்.

ஒருமுறை, நானே கணவரை சந்தித்து, அவரது தங்கையின் பிரச்னைக்கு மருத்துவம் பார்த்து, ‘உடனடியாக, அவளுக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள். நாம், நம் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வோம்...’ என்று கூறினேன்.

‘நீ இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. என் தங்கையை விட்டு நான் எங்கும் வர மாட்டேன்...’ என்கிறார், கணவர்.

நான், குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்து, ஒரு ஆண்டு ஆகப்போகிறது. இதுவரை ஒருநாள் கூட, குழந்தையை பார்க்க வரவில்லை. தற்சமயம், கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்று வருகிறேன்.

பெற்றோரை சிரமப்படுத்த விரும்பவில்லை. வேலை கிடைத்தால், நானும், என் குழந்தையுடன் தனியாக சென்றுவிட நினைத்துள்ளேன்.

அடுத்து, நான் என்ன செய்யட்டும் அம்மா.

– இப்படிக்கு,

உங்கள் மகள்.

அ ன்பு மகளுக்கு,

உன் நாத்தனார் என்ன படித்திருக்கிறாள்? யாரையாவது காதலித்து காதலில் தோற்றாளா?

உன் நாத்தனார் இப்படி நடந்து கொள்வதற்கான காரணங்களை பார்ப்போமா?

மனஅழுத்தம், பதட்டம், ஹார்மோன் ஏற்றஇறக்கங்கள், துாக்கமின்மை, ஆளுமைக் கோளாறு, தைராய்டு பிரச்னை மற்றும் மனச்சோர்வு முதலியவை காரணமாய் இருக்கக்கூடும்.

அவளுக்கு, ஹார்மோன் பரிசோதனையும், மனநல நிபுணர் ஆலோசனையும் தேவை.

தகுந்த சிகிச்சை மேற்கொண்டு, அவளை குணப்படுத்தாமல், அவளுக்கு திருமணம் செய்து வைப்பது கூடுதல் பிரச்னைகளை உருவாக்கும்.

அடுத்து, உன் கணவரை பற்றி பேசுவோம். அரிசி வியாபாரம் பண்ணும் உன் கணவர் எதற்கு, 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்?

உன் கணவருக்கு குடிப்பழக்கம், ஆன்லைன் சூதாட்டம் அல்லது வேறு ஏதேனும் கெட்ட பழக்கம் உண்டா?

ஏதோ ஒரு கரும்புள்ளி உன் கணவருக்கு பின் ஒளிந்திருக்கிறது. நீ முயற்சி பண்ணியிருந்தால் உண்மைகளை தோண்டி துருவி கண்டு பிடித்திருக்கலாம்.

அண்ணனுக்கு உணவு பரிமாறுவது, அண்ணனின் ஆடைகளை துவைப்பது, ஊர் உலகத்தில் எல்லா தங்கைகளும் செய்வது தானே! நிறைய வீடுகளில் வேலைபார்த்து தரும் தங்கைக்கு, அண்ணன்மார்கள் பலகாரம் வாங்கித்தருவர்; காசும் கொடுப்பர். இதையெல்லாம் ஒரு குறையாக நீ பார்ப்பது தவறு.

தாய் மற்றும் சகோதரியின் ஆடம்பர செலவுகளால் உன் கணவருக்கு கடன், ஏற்பட்டு இருக்குமோ?

மீண்டும் உன் கணவர் வீட்டுக்குப்போ. அரிசி வியாபார கணக்கை முழுமையாக தணிக்கை செய். நாத்தனார்,- உன் கணவர் இடையேயான உறவுமுறையை ஆழமாக, ‘ஸ்கேன்’ பண்ணு.

கணவரின் கடனுக்கான நதிமூலம், ரிஷிமூலம் ஆராய்.

கடனை, உன் கணவரின் கடை வியாபார வருமானத்தில் அடைக்க ஆவன செய்.

உன் கணவரின், தவறான நட்புகளை அடித்து நொறுக்கு.

மொத்தத்தில், கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் கண்களில் விரலைவிட்டு ஆட்டு.

உன்னிடம் ஏதேனும் குறை இருந்தால் தயங்காமல் உன்னை திருத்திக் கொள். உறவுகளை அரவணைத்து, தேவைப்பட்டால் கண்டித்து அடுத்த தலைமுறையின் மகிழ்ச்சியான எதிர்காலம் நோக்கி பயணம் செய் மகளே!

– - என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

‘‘நம்ம தொகுதிக்கு இடைத்தேர்தல் சீக்கிரம் வரணும்ன்னு சொல்றியே, ஏன் ராப்பிச்சை?’’

‘‘இடைத்தேர்தல் வந்தால் பணத்தை திருப்பி தர்றேன்னு நிறைய பேர், என்கிட்ட கைமாத்தா பணம் வாங்கியிருக்காங்களே!’’

– எம்.கல்லுாரிராமன், ராமநாதபுரம்.

‘‘சார், உங்க பையன் பிற்காலத்துல பெரிய அரசியல்வாதியா வருவான்!’’

‘‘என்ன சார் சொல்றீங்க...’’

‘‘ஏன்டா பக்கத்துல உள்ள பையனை பார்த்து காப்பி அடிக்கிறேன்னு கேட்டா, ‘நாங்க ரெண்டு பேரும் கூட்டணி அமைச்சு பரீட்சை எழுதுறோம்’ன்னு சொல்றான்!’’

– ப்ரணா, தஞ்சை.

‘‘கவர்ச்சி நடிகையோட மகளை, பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு...’’

‘‘பொண்ணை ‘நீச்சல் உடையில அலங்கரிச்சு கொண்டு வந்து உட்கார வச்சிட்டாங்க!’’

– ஷம்மு, திண்டுக்கல்.

@block_B@இதயத்தை மூடிவிட்டு இறைவனைத் தேடி அலைவது அறியாமை.

கோல்டன்@@block_B@@

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us