
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடை செய்யும் போது, காரத்திற்கு மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, இஞ்சி மற்றும் மிளகு சேர்த்தால், சுவையாக இருக்கும்; ஜீரண சக்தியும் அதிகரிக்கும்
* பயத்தம்பருப்பு சுண்டல் செய்யும் போது, பயத்தம் பருப்பை வாசனை வரும்படி நன்கு வறுத்து, செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்
* கோதுமை ரவை உப்புமா செய்யும் போது, தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக, தேங்காய்ப் பால் கொஞ்சம் சேர்த்தால், ருசியாக இருக்கும்
* தயிர் வடை செய்யும் போது, உளுத்தம் பருப்புடன் ஐந்து அல்லது ஆறு முந்திரி பருப்பையும் ஊற வைத்து, அரைத்தால், வடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

