
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனங்கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்பு போட்டு அது வெடிக்கும் வரை வறுத்து பின், தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கிழங்கை போட, கிழங்கு விரைவில் வெந்து விடும்
* கடலைப் பருப்பை ஊற வைத்து அரைத்து, ஆவியில் வேக வைத்து உதிர்க்கவும். அதை வழக்கமாக செய்யும் பாகற்காய் பொரியலில் சேர்த்துக் கிளறினால், பாகற்காயின் கசப்பு குறைந்து விடும்
* அலமாரிகளில் வேப்பிலைகளை பரப்பி, அதன் மீது பேப்பர் போட்டு பொருட்களை வைத்தால் பூச்சிகள் வராது

