PUBLISHED ON : ஜூன் 14, 2026

பாகற்காயை குழம்பு மற்றும் பொரியல் என, எது செய்தாலும், அதனுடன், கொஞ்சம் கேரட் அல்லது பீட்ரூட் துண்டுகளை கலந்து சமைத்தால், கசப்பு வெகுவாக குறைந்து விடும்
அடைக்கு மாவு அரைக்க அரிசி, பருப்பு ஊற வைக்கும் போது, இரண்டு மேஜைக்கரண்டி ஜவ்வரிசியையும் தனியாக ஊற வைக்கவும். அடை மாவு அரைத்ததும், ஜவ்வரிசியையும் அரைத்து அடை மாவுடன் சேர்த்து விட்டால், அடை கூடுதல் மொறு மொறுப்புடன் சுவையாக இருக்கும்.
பால் சேர்த்து செய்யும் சேமியா, ரவை மற்றும் ஜவ்வரிசி பாயசங்கள் சூடாக இருக்கும் போது அதில் சர்க்கரையை சேர்த்தால், திரிந்தது போல ஆகிவிடும். அதனால், பாயசத்தை இறக்கி வைத்துவிட்டு, சற்று நேரத்திற்கு பின், பொடிச் சர்க்கரையை சேர்த்தால், பாயசம் சுவையாக இருக்கும்
இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாக இருந்தால், பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு, ஒரு நிமிடம் அரைத்து, மாவில் கலந்து, இட்லி வார்த்தால், இட்லி பூ மாதிரி இருக்கும்
உளுந்து வடைக்கு, உளுந்து அரைக்கும் போது, மிக்ஸியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பின் அரைத்தால், மிக்ஸியில் இருந்து சுலபமாக எடுக்க முடியும்.
