தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூன் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெள்ளைப் பூண்டை தனித்தனி பல்லாகப் பிரித்து, சிறிதளவு எண்ணெயில் பிசிறி, வெயிலில் அரை மணி நேரம் காய வைத்தால், எளிதாக உரிக்க வரும்

* வெண்ணெய் மீது ஒரு தேக்கரண்டி சர்க்கரையை துாவி வைத்தால் உலராமல் அப்படியே இருக்கும்

* இட்லி மிளகாய் பொடி அரைக்கும்போது சிறிது கொப்பரை சேர்த்தால், சுவையும், மணமும் கூடும். எள் அல்லது வேர்க்கடலையை வறுத்து அரைத்தும் சேர்க்கலாம்

* உருளைக்கிழங்கை வெட்டிய பிறகு சிறிதளவு எலுமிச்சைச் சாறு பூசி வைத்தால் கறுக்காது

* புதினா சாறு அரை தேக்கரண்டி, சீரகப்பொடி அரை தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 1 மூடி, உப்பு, பெருங்காயம் அரை தேக்கரண்டி ஆகியவற்றை தண்ணீரில் கலந்து குடித்தால், புளித்த ஏப்பம் மற்றும் வயிற்றுப் பொருமல் நீங்கும்

* கடலை உருண்டை பிடிக்கும்போது நல்லெண்ணெய் தொட்டுப் பிடித்துப் பாருங்கள். உருண்டை, கண்ணாடி போல் 'பளபள'ப்பாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us