PUBLISHED ON : ஜூலை 05, 2026

அ நிறம் | அளவு
வெங்காய ஊ த் தப்பத்தின் நடுவில் சின்னதாக ஓட்டை போட்டு, அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் மேலும், 'கரகர'ப்பாக, ருசியாக இருக்கும்
* பாகற்காய் பழுக்காமல் இருக்க, இரு முனைகளையும் வெட்டி வைத்தால் நீண்ட நாட்கள் வரை பழுக்காது
* அடை மாவில் புதினா கீரையை சேர்த்து செய்தால் அடை வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்
* உருளைக் கிழங்கு காரக்கறி செய்யும்போது, அதில் அரை கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்
* உணவு மேஜைகளை துடைக்கும்போது, துடைக்கும் துணியில் சிறிது உப்பு அல்லது கற்பூரம் வைத்து துடைக்க ஈ, எறும்பு மற்றும் பூச்சிகள் எதுவும் அண்டாது.
