PUBLISHED ON : ஜூலை 12, 2026

சமையலில், உப்பு அதிகமாகி விட்டதா?
கு ழம்பு, சாம்பார், கூட்டு மற்றும் கிரேவி போன்ற பதார்த்தங்களில் உப்பு அதிகமாக இருந்தால், வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம் பருப்பு மற்றும் முந்திரிப் பருப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெயில் வறுத்து அல்லது வதக்கி, மிக்ஸியில் அரைத்து சேருங்கள். மீண்டும் ஒருமுறை கொதிக்க விடுங்கள். உப்பு தேவையான அளவுக்கு மாறிவிடும். மேலே சொன்ன பொருட்களில் எது நீங்கள் தயாரித்திருக்கும் உணவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று பார்த்துச் சேர்ப்பது முக்கியம்
* ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, ரசத்தைக் கொதிக்கவிட்டு மிளகு, சீரகத்துாள் போட்டு, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்கள்
* எலுமிச்சம்பழ அளவு சாதத்தை உருட்டி, சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி உப்பு கூடின குழம்பில் போட்டு விடுங்கள். உப்பின் அளவுக்கு ஏற்ப, இரண்டு மூன்று உருண்டைகள் கூடப் போடலாம். அரை மணி நேரம் கழித்து, வெளியில் எடுத்துவிட்டால், உப்பு சரியாக இருக்கும். வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடலாம்.
