PUBLISHED ON : ஜூலை 19, 2026

அ நிறம் | அளவு
* 'ஈஸி' மோர்க்குழம்பு செய்ய, இரண்டு மிளகாய் வற்றல், கால் கப் துருவிய தேங்காய், அரை தேக்கரண்டி சீரகம், கொஞ்சம் கறிவேப்பிலை இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் கடைந்த தயிரில், அரைத்து வைத்துள்ள விழுது, கால் தேக்கரண்டி மஞ்சள் துாள், தேவையான உப்பு சேர்த்து கலக்கி, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி, ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டால், மோர்க்குழம்பு தயார்
* சேமியா கேசரி செய்யும் போது, முதலில் தண்ணீரை மட்டும் ஊற்றிக் கொதிக்க வைத்து, சேமியாவை சேர்த்து வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, அதன்பின் சேமியாவுடன் நெய், சீனி, முந்திரிப் பருப்பு, கலர் சேர்த்துக் கிளறினால், சேமியா கேசரி தயார். ஆறிய பிறகும் உதிர் உதிராக, சுவையாக இருக்கும்.
