PUBLISHED ON : ஜூலை 05, 2026

அ நிறம் | அளவு
மீன்களைப்போல அதிக நேரம் தண்ணீருக்குள் இருக்கும் மனிதர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிலிப்பைன்ஸ், மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் உள்ள, கலடுபா தீவில், பஜாவு பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களை, 'ஸீ ஜிப்சி'கள் என்று அழைக்கின்றனர்.
இத்தீவு பகுதி, கடல் மட்டத்திலிருந்து, ஆறு அடி உயரத்தில் அமைந்துள்ளது. மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாக கொண்ட இவர்களால், அதிக நேரம் தண்ணீருக்குள் இருக்க முடிகிறது. குழந்தை பருவத்திலிருந்தே இவர்கள் பயிற்சி எடுத்து, இத்திறனை வளர்த்துக் கொள்கின்றனர்.
- ஜோல்னாபையன்
