
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம் காசர்கோட்டில், உப்பலா என்ற கிராமம் உள்ளது. இதை, கப்பல் கிராமம் என்றும் அழைப்பதுண்டு. உலகில் எங்கு கப்பல் விபத்து ஏற்பட்டாலும், இக்கிராமத்தில், ஏதேனும் ஒரு வீட்டில் கலக்கம் ஏற்படும்.
இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள், கப்பல்களில் பணியாற்றுகின்றனர். கிராம மக்கள் அனைவரும் நன்கு உருது மொழி பேசுகின்றனர். எனவே, இங்கு அரசு உருது பள்ளி ஒன்றும் இருக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்களிடம், 'என்ன வேலைக்கு போக ஆசை?' எனக் கேட்டால், 'கப்பலில் மாலுமியாக போக விருப்பம்...' என்கின்றனர்.
— ஜோல்னாபையன்