PUBLISHED ON : செப் 07, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வயதாகி விட்டதே...' என்ற வருத்தத்துடன் வீட்டில் முடங்கி கிடக்க மனமில்லை என்கின்றனர், சகோதரிகளான, 80 வயதை கடந்த வலசம்மாவும், ரமணியும். தள்ளாத வயதிலும், இந்த சகோதரிகள் இதுவரை, 16 வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளனர்.
கேரள மாநிலம், வடக்கஞ்சேரி இவர்களது சொந்த ஊர். 'இந்த வயதிலும் உலகம் சுற்றுகிறீர்களே...' என, ஏளனம் செய்பவர்களை பார்த்து, 'நாங்க உயிருள்ளவரை நாடு சுற்றுவதை நிறுத்த மாட்டோம். முதுமையில் ஏற்படும் நோய்கள், இந்த பயணங்களின் போது கரைந்து விடுகின்றன...' என்கின்றனர், இந்த சாதனை பெண்கள்.
ஜோல்னாபையன்