sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தீபாராதனா! (14)

/

தீபாராதனா! (14)

தீபாராதனா! (14)

தீபாராதனா! (14)


PUBLISHED ON : ஜன 04, 2026

Google News

PUBLISHED ON : ஜன 04, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: மருத்துவமனையில், உள்ள தீபாவின் அம்மா மஞ்சுளாவுக்கு மூளையில், அ றுவை சிகிச்சை செய்ய, 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்று, செவிலி கூறியதும், பதட்டமடைந்து, அங்கேயே மயங்கி விழுந்தாள், தீபா. அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வீட்டுக்கு போக சொன்னார், அவளது குடும்ப மருத்துவர். அம்மாவின் அறுவை சிகிச்சைக்காக, தங்கள் வீட்டை அடமானம் வைக்க, சொத்துகளின் மீது கடன் கொடுக்கும் நிறுவனம் ஒன்றை அணுகினாள், தீபா. ஆனால், வீடு, தீபா பேரில் இல்லாமல், அவர் அம்மாவுடன், 'ஜாயின்ட்' ஆக இருந்ததால், அடமானம் வைக்க முடியாது என்று தெரிவித்தது கடன் கொடுக்கும் நிறுவனம். 'தீபா ஷிப்பிங் கம்பெனி' பற்றி, தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும், யுவராஜிடம் சொல்லி, விசாரிக்க சொல்லியிருந்தாள், ஆராதனா. அது சம்பந்தமாக, 'பைல்' ஒன்றை, ஆராதனாவிடம் தந்து, தீபாவின் அம்மா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலையும், ஆராதனாவிடம் கூறினான், யுவராஜ். சிகிச்சை செலவுக்காக, ஆறு லட்சம் ரூபாயை மருத்துவமனையில் செலுத்தியதோடு, தீபாவின் அம்மா மஞ்சுளாவை சந்திக்க சென்றாள், ஆராதனா. ஐ.சி.யூ.வில் இருந்த மஞ்சுளவை பார்க்க முடியாததால், திரும்பினாள். அப்போது, அங்கு வந்த தீபா, ஆத்திரத்துடன், ஆராதனாவை முறைத்தபடி சென்றாள்.

ஆராதனாவை நெருக்கத்தில் கடந்து வந்த அதிர்வுகள் குறையாமல் டாக்டர், நஞ்சுண்டனைப் போய் பார்த்தாள், தீபா.

''அம்மாவை இன்னைக்கு, 'நைட் ஸ்பெஷல்' வார்டுக்கு மாத்திருவோம்,'' என்ற, டாக்டர், ''ரெண்டு நாள்ல, 'டிஸ்சார்ஜ்' பண்ணலாம். இங்க இருந்தா செலவு எகிறிடும். மண்டையோட்டுல ஓட்டை போட்ட இடத்துல தோலை வெச்சு மூடியிருக்கோம். அது காயப்படாம இருக்க, ஒரு, 'ஸ்பெஷல் ஹெல்மெட்' போட்டுக்கணும்.

''வீட்லயும், 'இன்பெக்ஷன்' ஆகாம கவனமாப் பார்த்துக்கணும். வீட்ல ஒரு நர்ஸை போட்டுக்கோ. நாலஞ்சு வாரம் கழிச்சு, வெட்டி எடுத்த, 'ஸ்கல் போர்ஷனை' இன்னொரு, 'சர்ஜரி' செய்து பொருத்திடலாம்,'' என்றார்.

''அதோட அம்மா சரியாயிடுவாங்களா, டாக்டர்?'' என்று, கேட்டாள், தீபா.

''பாதிக்கப்பட்டிருக்கறது மூளை. உடம்புல எதெல்லாம் வேலை செய்யும், எதெல்லாம் தடுமாறும்ன்னு ரெண்டாவது, 'சர்ஜரி'க்கு அப்புறம் தான் சொல்ல முடியும்,'' என்று டாக்டர் கூறியதை கேட்கக் கேட்க, தீபாவுக்கு கலக்கமாக இருந்தது.

தன்னிரக்கத்தில், கண்களில் கண்ணீர் திரண்டு தொண்டையடைத்தது.

''அம்மாவை எப்போ பார்க்கலாம், டாக்டர்?''

''வாம்மா, இப்பவே பார்க்கலாம்,'' என்ற, டாக்டர், தீபாவுக்கு ஒரு, 'ஸ்டிரிலைஸ்டு கோட்' கொடுத்து அணியச் சொல்லி, தானும் அணிந்து, 'இன்டன்ஸிவ் கேர் யூனிட்'டிற்குள் அழைத்துப் போனார்.

மஞ்சுளாவின் கூந்தல் முற்றிலும் மழிக்கப்பட்டு, மண்டையில் பெரிய பெரிய பிளாஸ்திரிகள் ஒட்டப் பட்டிருந்தன. முகத்தில், 'ஆக்ஸிஜன் மாஸ்க்' பொருத்தப்பட்டிருந்தது. கை நரம்புகள் வழியே ஏதோ மருத்துவ திரவம் இறங்கி கொண்டிருந்தது. கண்கள் மூடியே இருந்தன.

டாக்டர் அவள் தோளில் தட்டியதும், மெல்ல இமைகளைத் திறந்தாள்.

தீபாவைப் பார்த்தாள். ஆனால், அடையாளம் கண்டுகொண்டதாக அவள் கண்கள் தெரிவிக்கவில்லை. அயர்ச்சியுடன் மறுபடி கண்களை மூடிக் கொண்டாள். ''அம்மா... அம்மா,'' என்ற, தீபாவின் குரல் அவளை எட்டியதாக தெரியவில்லை.

தீபாவின் கன்னங்களில் கண்ணீர் இறங்கியது.

'போகலாம்...' என்று சைகை செய்து, அவளை வெளியே கூட்டி வந்தார், டாக்டர்.

நகைக்கடையில், அந்த நேரத்திலும், கூட்டம் இருந்தது. தான் கொண்டு வந்திருந்த நகைகளை எடுத்து வைத்தாள், தீபா. ஊழியர் ஒவ்வொரு நகையையும் உட்புறம் திருப்பி பார்த்து அது எங்கே வாங்கியது என்பதைக் குறித்துக்கொண்டு, தனித்தனியே எடை போட்டார்.

''மேடம், இந்த வளையலும், செயினும் மட்டும் தான் நம்ப கடைல வாங்கினது. எட்டு சவரன் இருக்கு. இதுக்கு இன்னைக்கு ரேட்ல நீங்க நகை வாங்கிக்கலாம். பணமாத்தான் வேணும்ன்னா, மூணு சதவீதம் கழிச்சுருவோம். மிச்ச நகையெல்லாம், 150 கிராம் இருக்கு. அதெல்லாம் வேற வேற கடையில வாங்குனது. அதுக்கெல்லாம் சேதாரம், 16 சதவீதம் கழிச்சிருவோம்.''

''என்னங்க இது அக்கிரமமா இருக்கு? வாங்கும்போதும் சேதாரம்ன்னு கூடுதலா வாங்கறீங்க. நாங்க விக்க வந்தா அப்பவும் சேதாரம் போடறீங்க,'' என்று உடன் வந்திருந்த, திலகன் குரலை உயர்த்தினான்.

''நம்ம கடையில வாங்கினதை வேற கடையில குடுத்தாலும், இப்படித்தான் செய்வாங்க சார். வாங்கின கடையிலயே குடுத்தீங்கன்னா, சேதாரம் கம்மியா போவும்.''

''அதுக்காக ஒவ்வொரு கடையா ஏறி இறங்கச் சொல்றீங்களா?'' என்ற திலகனிடம், ''முடிவு செஞ்சிட்டு வாங்க,'' என்று, சொல்லி, அவர்களை அலட்சியம் செய்து, அடுத்த வாடிக்கையாளரின் நகைகளை எடைபோட ஆரம்பித்தார், ஊழியர்.

''தீபு, அதுக்குதான் சொன்னேன். எதுக்கு அவசரப்பட்டு விக்கணும்? அடமானம் வெக்கலாம்.''

''ஏய், கடன் வாங்கிட்டு மாசா மாசம் வட்டி கட்டணும். கடனை அடைச்சாத்தான் நகையை மீட்க முடியும். அதெல்லாம் எப்படின்னு என்னால யோசிக்கக்கூட முடியாது. இதுல பெரும்பாலும் அம்மாவோட நகை தான். என் போக்குல விடு,'' என்றாள், தீபா.

சற்றே தயங்கி, ''சரி, உன் இஷ்டம்,'' என்றான், திலகன்.

நகைகளை ஊழியர் பக்கம் நகர்த்தி, ''என்ன கொடுப்பீங்களோ, குடுத்துத் தொலைங்க,'' என்றாள், கோபமாக, தீபா.

அவர் நிமிர்ந்து அவளை முறைத்தார். அடுத்த இரு வாடிக்கையாளர்களை கவனித்து விட்டுத்தான், தீபாவின் நகைகளை மறுபடி எடுத்தார்.

நே ரே மருத்துவமனை கவுன்ட்டருக்கு நடந்தாள், தீபா.

ஹேண்ட்பேக் திறந்து, 500 ரூபாய் கட்டுகள் நான்கை எடுத்து வைத்தாள்.

மஞ்சுளாவின் பெயரைச் சொன்னாள்.

கவுன்ட்டர் பெண், மேஜை இழுப்பறையில் பணத்தை போட்டுவிட்டு, கணினியில் பதிவு செய்தாள். ''இது வரைக்கும், 9 லட்சத்து 75 ஆயிரம் கட்டியிருக்கீங்க,'' என்றாள்.

திடுக்கிட்டாள், தீபா.

''இல்லையே... அவ்வளவு பணம் கட்டலியே!''

''இப்ப கொஞ்சம் முன்னால கட்டின, ஆறு லட்ச ரூபாயையும் சேர்த்துச் சொல்றேன்,'' என்றாள், கவுன்ட்டரில் இருந்த பெண்.

பணம் கட்டிய விபரம் கேட்டாள், தீபா. அந்தப் பணம், ஆராதனாவால் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டதும், அவள் முகம் சிவந்தது.

''கண்டவங்க கொண்டுவந்து கொடுத்தாலும், வாங்கிப் போட்டுக்குவீங்களா? என்னை ஒரு வார்த்தை கேக்க வேண்டாமா?'' என்று இரைந்தாள், தீபா.

''மேடம், பணம் யார் கணக்குல கட்டப்படுதுன்னு கணக்கு வெச்சிக்கற வேலை தான் என்னுடையது. யார் யார் கட்டறாங்கன்னு கவனிக்கற வேலை கெடையாது,'' என்று பதிலுக்கு, கவுன்ட்டர் பெண்ணும், க்ரீச்சிட்டாள்.

தீபாவிற்குச் சுருக்கென்றது. ''சாரி,'' என்றவள், ''இனிமே, அவங்க கட்டற பணத்தைலாம் வாங்காதீங்க,'' என்று மெல்லிய குரலில் சொல்லி, லிப்டுக்கு நடந்தாள்.

பி ன்னணியில், 'கீர்த்திலால் பிரதர்ஸ்' என்ற நியான் எழுத்துகள் ஒளிர்ந்தன.

மூன்றாவது மாடியில், லிப்ட்டிலிருந்து வெளிப்பட்டு, பளபளக்கும், 'டைல்'களில், 'ஹீல்ஸ்' சப்திக்க, வேகமாக நடந்தாள், தீபா.

'ஆராதனா' என்று எழுதப்பட்ட அறைக்கதவைத் திறந்தாள்.

''யெஸ்?'' என்றார், அங்கிருந்தவர்.

''ஆராதனாவைப் பார்க்கணும்.''

''வெயிட் பண்ணுங்க. உங்க பேரைச் சொன்னீங்கன்னா.''

'சரிதான் போய்யா' என்பதுபோல், அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அடுத்த கதவைத் திறந்து நுழைந்து விட்டாள், தீபா.

ஜன்னலை ஒட்டி நின்று யாரிடமோ போனில் பேசிய படியே திரும்பிப் பார்த்தாள், ஆராதனா. வெளியிலிருந்து கசிந்த மாலை வெளிச்சத்தில் அவள் முகம் இன்னும் எடுப்பாக இருந்தது.

''நீங்களா!'' என்றவள், போனைத் தழைத்து, ''உக்காருங்க, தீபா,'' என்றாள்.

பதற்றத்துடன் கதவைத் திறந்து பார்த்த, பி.ஏ.விடம், பரவாயில்லை என்று சைகை செய்தாள். போன் உரையாடலை அவசரமாக கத்தரித்து, இருக்கையில் அமர்ந்தாள்.

கைப்பையிலிருந்து, 500 ரூபாய் கட்டுகளாக எடுத்து மேஜை மீது தொப்பென்று வைத்தாள், தீபா.

''உன் பணம், எண்ணிக்க. ஏதாவது வட்டி தரணுமா?''

''தீபா, நீங்க மாறவே மாட்டீங்களா?'' ஆராதனாவின் குரல் காயப்பட்டிருந்தது.

''இன்னும் உன்கிட்ட பிச்சை எடுக்கற நெலமைக்கு நாங்க வரல்லே.''

''அப்படிலாம் நெனச்சு அந்தப் பணத்தைக் கொடுக்கலை, தீபா. எங்கம்மாவோட சிகிச்சைக்கு உங்கப்பா கொடுக்கலியா? அதே போல ஒரு நல்லெண்ணத்துல தான் குடுத்தேன். அவசரத்துக்குக் கூட உதவலைன்னா அப்புறம் மனுஷங்களா பொறந்ததுக்கு என்ன அர்த்தம்? பணத்தை எடுத்திட்டுப் போங்க.''

''எங்கம்மா ஆஸ்பத்திரில இருக்கறது உனக்கு எப்படித் தெரியும்?'' என, கேட்டாள்.

ஒரு கணம் தயங்கிய, ஆராதனா, ''வேற ஒருத்தரைப் பார்க்க ஹாஸ்பிட்டல் வந்திருந்தேன். அங்க தெரிஞ்சுக் கிட்டேன்,'' என்று மழுப்பலாக பதில் சொன்னாள்.

''இன்னொரு தடவை பணத்தை எறிஞ்சு எங்களை அவமானப்படுத்த நெனைக்காத.''

ஆராதனா, அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, விருட்டென்று வெளியேறினாள், தீபா.

ம ஞ்சுளாவை வீட்டுக்குக் கூட்டி வந்தாயிற்று.

அவளுடைய அறையை பலமுறை, 'ஸ்ட்டிரிலைஸ்' செய்து, மருத்துவக் கட்டில் வாங்கிப் போட்டாயிற்று. ஒரு தனி செவிலியையும் கவனிக்க ஏற்பாடு செய்தாயிற்று. நகை விற்ற பணம் வெகுவேகமாகக் கரைந்து கொண்டிருந்தது.

தன்னுடன் கல்லுாரிப் படிப்பை முடித்த நண்பர்களுடன், குலுமணாலி சுற்றுலா என்று புறப்பட்டுப் போயிருந்தான், திலகன். பொதுவாக அவன் நண்பர்களுடன் பார்ட்டிக்கு போனாலே அவன் பர்ஸில் கொஞ்சம் பணத்தைத் திணித்து அனுப்பும், தீபா, இந்த முறை அதைச் செய்யவில்லை.

''சாப்பாடு ரெடி, தீபாம்மா.''

எதிரில் வந்து நின்ற துரையை பார்த்தாள், தீபா.

''வரேன்.''

அவர் நகராமல் அங்கேயே நின்றதும், ''வரேன்னு சொன்னேனே,'' என்று சற்றே எரிச்சலுடன் சொன்னாள்.

''அதில்லம்மா. இன்னிக்கி தேதி பதினாறு ஆச்சு.''

''அதுக்கென்ன?''

''எனக்கு இன்னும் சம்பளம் குடுக்கல. வழக்கமா அம்மா குடுத்துருவாங்க,'' என்றார், துரை.

தீபாவுக்கு நெஞ்சில் அம்பு தைத்தது. சே, இதை எப்படி யோசிக்காமல் விட்டேன்? பார்வையால் அவரிடம் மன்னிப்பு கோரினாள்.

''சாரி அங்கிள். 'ஹாஸ்பிட்டல்' அது இதுன்னு அலைஞ்சதுல மிஸ் பண்ணிட்டேன்.''

''நான் ஊருக்குப் பணம் அனுப்பணும். இல்லேன்னா, கேட்டிருக்க மாட்டேன்,'' என்ற, துரையிடம், மறு பேச்சில்லாமல் அவர் சொன்ன சம்பள பணத்தை எடுத்துக் கொடுத்தாள், தீபா.

அ டுத்த நான்கு வாரங்கள், தீபா, மஞ்சுளாவை கவனித்துக்கொள்வதிலேயே ஓடின.

கண்களைத் திறந்து பார்த்தாள், மஞ்சுளா. அடையாளம் கண்டு புன்னகைத்தாள். ஆனால், புரிந்து கொள்ள முடியாத அளவு, அவள் பேச்சு குழறலாக இருந்தது. வலதுபுறம் கையும், காலும் இயங்கவில்லை என்பதால்,செவிலி உதவியுடன் தான் எதையும் செய்ய முடிந்தது.

ஒரு பக்கம், உயிலில் ஞானசேகரன் குறிப்பிட்டிருந்தவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்ற, பத்மனாபன் ஆவன செய்து கொண்டிருந்தார்.

இடையில் சுற்றுலா முடிந்து திரும்பி வந்திருந்தான், திலகன்.

''தீபூ, நாளைக்கு எனக்கு, 'பைனல் ரிசல்ட்ஸ்' வந்துரும். அப்புறம், 'பிசியா' இருப்பேன். வாயேன், ஒரு சினிமாவுக்கோ, மகாபலிபுரத்துக்கோ போலாம்.''

''இல்ல, திலக். எனக்கு மூடு இல்ல. வீட்டுக்கு வா, பேசிட்டிருப்போம். அம்மாவை, 'ரெவ்யூ' பண்ண டாக்டர் வேற வந்து பார்க்கறேன்னு சொல்லி இருக்காரு.''

''உங்க வீடே இப்ப ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு, தீபு. எல்லா ரூம்லயும் மருந்து வாசனை, குறுக்க நெடுக்க நடந்துபோற, நர்ஸ். அங்க வந்தா எனக்கு மூடு இருக்காது. வீட்லயே எத்தனை நேரம் முடங்கிக் கெடப்பே? என் ரூமுக்காச்சும் வா. என் 'டூர் போட்டோஸ்' காட்டறேன்,'' என்ற திலகனிடம், ''சாரி,'' என்று நறுக்குத் தெறித்தாற்போல், போன் தொடர்பைத் துண்டித்தாள், தீபா.

டா க்டர் நஞ்சுண்டன் வந்தார்; பார்த்தார். திருப்தியுடன் தலையாட்டினார்.

''அடுத்த சர்ஜரிக்கு அம்மா ரெடிம்மா. நாளைக்கே, 'அட்மிட்' பண்ணிடலாம். மூணு நாள்ல, 'டிஸ்சார்ஜ்' பண்ணிடுவோம். அப்புறம், பிஸியோதெரப்பி, ஸ்பீச் தெரப்பிலாம் ஏற்பாடு பண்ணனும். ரெண்டு வாரத்துக்கொரு தடவை, 'ரெவ்யூ'க்கு நானே வர்றேன்,'' என்றார்.

மறுநாள் ஆம்புலன்ஸ் வந்தது.

மஞ்சுளாவை ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திலகனிடமிருந்து போன்.

''சொல்லு,'' என்றாள், இயந்திரத்தனமாக.

''சூப்பர் மார்க்கோட ஐயா பாஸ்,'' என்றான்.

''கங்கிராட்ஸ்,'' என்றாள் தீபா.

''இன்னிக்கு பேப்பர் பாத்தியா?'' திலகனின் குரலில் பரபரப்பு இருந்தது.

''இப்ப இருக்கற நிலமைல ரெண்டு கார் எதுக்கு? ஒண்ணை வித்துடலாம்ன்னு முடிவு பண்ணிதான் விளம்பரம் குடுத்தேன். சாரி, அது நீ ஆசையா ஓட்டற, என் காரு,'' மறுமுனையில், திலகன் மூச்சை இழுத்துப் பிடிப்பது கேட்டது.

''அந்த விளம்பரத்தை நான் பார்க்கவே இல்ல, தீபு. நான் சொன்னது இன்னொரு விளம்பரத்தை.''

''எதைச் சொல்றே?''

''நீயே பேப்பர்ல பாரு.''

அத்தனை அவசரத்திலும், அன்றைய தினசரியை எடுத்துப் பிரித்தாள், தீபா.

நான்காவது பக்கத்தில் கட்டம் கட்டி வந்திருந்த விளம்பரத்தைப் பார்த்ததும், அதிர்ச்சியில் அவள் புருவங்கள் முடிச்சிட்டன.



- தொடரும்சுபா






      Dinamalar
      Follow us