PUBLISHED ON : ஆக 23, 2026

முன்கதைச் சுருக்கம்: பெ ங்களூரு விமான நிலையத்தை அடைந்ததும், அங்கு தயாராக இருந்த காரில் ஏறி, சித்தார்த் வீட்டுக்கு சென்றனர். தன் பாட்டியிடம், நித்யாவை அறிமுகப்படுத்தினான், சித்தார்த். நித்யாவை பார்த்த பாட்டிக்கும், அவளை மிகவும் பிடித்து விட்டது. வீட்டு பணியாள், ருத்ரம்மாவிடம், முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய சொன்னார், பாட்டி. பாட்டியின் விருப்பப்படி, விலையுயர்ந்த பட்டுப்புடவை மற்றும் வைர நகைகளை, நித்யாவுக்கு அணிவித்து, சித்தார்த்தின் அறைக்குள் அனுப்பினாள், ருத்ரம்மா. நித்யாவின் அலங்காரத்தைப் பார்த்து கோபமடைந்து, உடனடியாக இது எல்லாவற்றையும் கழட்டி பாட்டியிடம் கொடுத்துவிட்டு வர சொன்னான், சித்தார்த். பா ட்டியின் அறையில், நித்யாவும், ருத்ரம்மாவும் இருப்பது கண்டு, வேகமாக அருகில் போனான். நல்ல காலமாக, ருத்ரம்மாவோ, நித்யாவோ பாட்டியிடம் ஒன்றும் சொல்லவில்லை என்பது, அவர்கள் நின்ற விதத்திலிருந்து தெரியவர, அவசரமாக சென்று, நித்யாவின் தோளில் கை போட்டு அணைத்தான்.
''டியர், முதல்ல பாட்டிகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு, அப்புறம் மாடிக்குப் போகலாம், ஓ.கே.,'' என்று மென்மையாக சிரித்தான்.
கோபப்பட்டதற்காக அவன் வருத்தப்படுகிறான் என்பதை புரிந்து கொண்ட, நித்யா, 'பரவாயில்லை' என்பது போல் புன்னகைத்தாள்.
இருவரும் பாட்டியின் பாதங்களை வணங்கி எழ, மிகுந்த சந்தோஷத்தோடு பாட்டி சொன்னாள்...
''பத்தே மாசத்துல எனக்கொரு பேரனை பெத்துத் தரணும்.''
''அஜ்ஜி, நான் எப்பவுமே 'சிங்கிள் ரன்' எடுத்ததே இல்லை. 'மினிமம் டூ ரன்ஸ்' தான். கவலைப்படாதீங்க. பேரன் - பேத்தின்னு, 'ட்வின்ஸ்' பெத்து தர்றோம். என்ன நித்யா?''
வெட்கம் பிடுங்கித்தின்ன, தலைகுனிந்தாள், நித்யா.
''வர்றோம் பாட்டி,'' என்றவன் அறையை விட்டு, வெளியில் வரும்முன், ருத்ரம்மாவிடம் மன்னிப்பு கேட்டான்.
''சாரி, ருத்ரம்மா.''
''ஐயா, என்னய்யா நீங்க போய்,'' என்றாள், ருத்ரம்மா.
மாடி அறைக்கு வந்த பின், நித்யாவை கட்டிலில் உட்கார வைத்தவன், ''மகாராணி... இப்ப ஒவ்வொன்னா நான் கழட்டட்டுமா?''
''அதுக்கு முன்னால நான் ஒண்ணு கேட்கட்டுமா?'' என்றாள், நித்யா.
''என்ன, நீ? 'பர்மிஷன்'லாம் கேட்டுக்கிட்டு. நான் உன்னுடையவன் என்றானபின், முழு உரிமை உனக்கு தானே! தயக்கம் ஏன், கேளு?''
''எதுக்காக அப்படி கோபப்பட்டீங்க?''
''அது கோபமில்ல, நித்யா. வருத்தம். அதைக் கோபமா வெளிப்படுத்திட்டேன்.''
''அதான் ஏன்னு கேக்கறேன்?''
''பின்ன என்ன, நித்யா. இது ரொம்ப, 'சென்ஸிட்டிவ்'வான, 'பர்சனல்' விஷயம். அந்தரங்கம் ரொம்ப புனிதமானது, நித்யா. அதை, இந்த மாதிரி அம்பலம்படுத்தி, 'சீப்' ஆக்குறது எனக்குப் பிடிக்கல. அதனால், கொஞ்சம், 'இமோஷனலாகி' கோபப்பட்டுட்டேன். 'ஐ யம் சாரி' நித்யா...''
''அதை விடுங்க. ரெண்டு பேரும் அமைதியா உட்கார்ந்து பேசலாம்.''
இருவரும் கட்டிலில் அருகருகே அமர்ந்து கொண்டனர். அவள் கையை எடுத்து, தன் கையில் வைத்தவாரே பேச்சை ஆரம்பித்தான், சித்தார்த்...
''நீ எந்த மாதம், எத்தனாம் தேதி பொறந்தே?''
''பிப்ரவரி மாசம், 19ம் தேதி.''
''ஹை, அடுத்த மாசம். பெரிசா கொண்டாடலாம். அது சரி, இதுவரைக்கும் உனக்கு எத்தனை பொறந்த நாள் வந்திருக்குன்னு சரியா சொல்லு பார்ப்போம்?''
''எஸ் சார், சொல்றேன் சார்,'' என்றவள், மனதுக்குள் கணக்கு போட்டாள்.
''பத்தொன்பது முறை,'' என்றாள்.
''மக்கு, மக்கு... கணக்குலேயும் வீக்கா? ஒவ்வொருவருக்கும் பொறந்த நாள் ஒண்ணே ஒண்ணு தான். மத்ததெல்லாம் தொடர்ச்சி தான். சரி... இப்போ ஒவ்வொன்னா எல்லா நகையும் கழட்டலாமா?''
''இருங்க நானே கழட்டறேன்.''
''ஊஹும். நீ கழட்ட வேணாம். நான் கழட்டறேன். நீ கண்ணை மட்டும் மூடிக்க.''
கண்களை மூடினாள்.
''நான் சொல்ற வரை கண்ணைத் திறக்கக் கூடாது.''
''திறக்க மாட்டேன்.''
''ஊஹும் நான் நம்ப மாட்டேன்.''
''ப்ராமிஸ். நீங்க சொல்ற வரை திறக்க மாட்டேன்.''
காதில், கழுத்தில், கைகளில் இருந்த வைர நகைகளை கழற்றினான். மாங்கல்ய கருகுமணி, சங்கிலி தவிர எல்லா நகைகளையும் கழற்றிய பின், அவளுக்கே பாரம் இறங்கின மாதிரி இருந்தது.
''இப்போ, கண்ணைத் திறக்கலாமா?'' என்று கேட்டாள்.
''இன்னும் முடியல.''
''முடியலையா? என்ன பாக்கி இருக்கு?''
''இருக்கே.''
''எது?''
''பட்டுப்புடவைன்ற பேர்ல சாக்குப் பை மாதிரி உடம்புல சுத்திக்கிட்டு இருக்கியே!''
'ஹேய்... ஹேய்... ஹேய்,'' என்று, எழ முயன்றவளை அழுத்தி, புடவையை சுருட்டி மூலையில் போட்ட போது, சடாரென்று கண்களைத் திறந்தாள்.
''ஐயோ, 'லைட்'டை அணைங்க,'' என்று மெல்லிய குரலில் அவன் காதருகில் 'கிசுகிசு'த்தாள்.
''அணைக்க மாட்டேன். வெளிச்சத்துல உன் முழு அழகையும் பார்க்கணும்.''
''ப்ளீஸ், ப்ளீஸ்...'' அதற்கு மேல், 'ப்ளீஸ்' போட விடாமல், அவள் உதடுகளை தன் உதடுகளால் அழுத்தி படுக்கையில் கிடத்திய பின், சித்தார்த்தின் பிடிக்குள் திணறியவள், மெல்ல சுதாரித்து அவனுக்குள் அமிழ்ந்து, கரைந்து போனாள்.
ம றுநாள் காலை எழுந்த போது, உடல் முழுவதும் வலித்தது. கிரிக்கெட் மட்டை பிடிக்கிற கையின் வலிமை எப்படி இருக்கும் என்று உணர்ந்தாள். எங்கோ சுருட்டி வீசப்பட்டிருந்த உடைகளை எடுக்க, கட்டிலை விட்டு இறங்க முயற்சித்தவளின் இடுப்பை அணைத்து அருகில் இழுத்தான், அவன்.
''விடுங்க, பொழுது விடிஞ்சாச்சு.''
''பொழுது விடிஞ்சா, நீ என்ன செய்யப் போற?''
''கீழே போய் உங்களுக்கு, காபி...''
''எனக்கு காபியெல்லாம் குடிக்கிற பழக்கமில்ல.''
''எனக்கிருக்கே?''
''இருந்தா, பக்கத்துல இருக்குற, 'இன்டர்காமில்' ரெண்டாம் நம்பரை அழுத்தி, காபி வேணும்ன்னு சொல்லு. சொன்ன ரெண்டாவது நிமிஷம் வரும்.''
''எனக்கு, -'பில்டர் காபி' தான் பழக்கம்.''
''அதையும் சொல்லிடு.''
''பேஸ்ட், பிரஷ், டிரஸ்.''
''பாத்ரூம் கதவைத் திற, 'பேஸ்ட், பிரஷ், சோப், டவல்' எல்லாம் ரெடியா இருக்கும். 'வார்ட் ரோப்' கதவை தள்ளினா, வரிசையா புடவை, அதுக்கு தேவையான உள்ளாடைகள் இருக்கும். புடவை வேணாம்ன்னா அதே 'வார்ட் ரோபின்' அடுத்த கதவை திற, 'குர்த்தி செட், சுடிதார் செட்' ரெடியா இருக்கும்.''
''என் அளவு எப்படி தெரிஞ்சுச்சு.''
''கண் பார்வைல தோராயமான கணக்கு தான்.''
''நான் போய் ரெடியாகிட்டு வரட்டுமா?'' என்று கேட்டாள்.
''ரெடியாயிட்டு வந்தப்புறமும் இதே தானே! அதுக்கு ஏன் ரெடியாகணும்?''
''ஐய்ய... ஆசையப்பாரு.''
''ஆசை தான், நித்யா. சாதாரண ஆசையில்ல. உயிர் மாதிரி ஆசை.
நீயெனதின்னுயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
துயர் போயின போயின துன்பங்கள் நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதினிலே...
வாயினிலேயேமுதுாறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே...
என்று, பாரதி தானே எழுதியிருக்காரு... கண்ணம்மான்னு வர்ற இடத்தில் எல்லாம் உன் பேரை போட்டுப் பாடணும் போல இருக்கு. உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூடப் பிரியக் கூடாதுன்னு தோணுது.''
''சித்தார்த்,'' என்று முதல் முறையாக அவன் பெயரைச் சொல்லி கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டாள்.
''நித்யா,'' கண்களை உயர்த்தி அவளை பார்த்தான், அவன்.
''ம். சொல்லுங்க?''
''இப்படியே காலமெல்லாம் இருந்துடலாமா?''
''அப்புறம், 'மேட்ச்' எப்படி ஆடறது?''
''ம்... 'மேட்ச்சும்' வேணாம், ஒண்ணும் வேணாம்... எல்லாத்தையும் துாக்கிப் போட்டுட்டு உன்னைக் கூட்டிக்கிட்டு சுவிட்சர்லாந்தோ, ஸ்வீடனோ போய், 'செட்டில்' ஆயிடலாம்ன்னு தோணுது. அமைதியான சின்ன வீடு, ரெண்டு ஆண் குழந்தை, ரெண்டு பெண் குழந்தை, நீ - நான் இது தான் நம்ம உலகம்ன்னு வாழ மாட்டோமான்னு மனசு ஏங்குது.''
''மனசுன்றது ரொம்பப் பொல்லாதது,'' என்றாள், நித்யா.
''ஏன், அப்படி சொல்ற?'' என்று கேட்டான், சித்தார்த்.
''பேர், புகழ் இல்லாத போது, பேர் புகழுக்கு ஏங்க வைக்கும். பேர், புகழ் இருந்தால் முகமற்று, சாதாரணமாக கூட்டத்தில் ஒருவனாக இருக்க மாட்டோமா என்று பெருமூச்சு விட வைக்கும்.''
''நீ சொல்றது நிஜம்... சத்தியமான உண்மை. பேர், புகழ், தேவைக்கு மேல் பணம், எப்போதும், 'லைம் லைட்'ல இருப்பதெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல மூச்சு திணற வைக்கும். அது தான் எனக்கு இப்ப நடந்துக்கிட்டிருக்கு. குத்து விளக்கான உன்னை நாடினேன்.''
குழந்தையாய் அவனை அணைத்து, முன் நெற்றியில் முத்தமிட்டாள்.
''அதிகப் புகழ் வெளிச்சம் உங்க மனசை சுட ஆரம்பிச்சிருக்கு.''
''எக்ஸாட்லி. எனக்கு ஒண்ணும் வேண்டாம், நித்யா. நீ-நான். உனக்காகவே நான். எனக்காகவே நீ. தினமும், உன் மடியில், பத்து நிமிஷமாவது படுத்து இளைப்பாறணும்.''
''பத்து நிமிஷம் என்ன. பத்து யுகம் நீங்க என் மடியில் படுத்தாலும் நான் சந்தோஷப்படுவேன். அதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும்!''
''நாம் கொடுத்து வெச்சிருக்கணும்ன்னு சொல்லு, நித்யா. ஒரு பையன், ஒரு பொண்ணு பெத்து ரெண்டு பேரையும் கிரிக்கெட்டியராக்கி முதல், 'மாட்ச்' விளையாடறதைப் பார்த்தப்புறம், ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுக்கிட்டு செத்துப் போயிடலாம், நித்யா.''
''சீ, என்ன பேச்சு பேசுறீங்க? வாழ்க்கையோட முதல் நாள்ல காலடி எடுத்து வெச்சிட்டு, கடைசி நாளைப் பத்தி பேசுறீங்க?''
''நிறைவான வாழ்க்கை வாழ்ந்தப்புறம் போறும்ன்னு தோணினதுக்கு அப்புறம், ஒருநாள் கூட, 'எக்ஸ்ட்ராவா' இருக்கக் கூடாது! வயிறு முட்ட சாப்பிட்டதுக்கப்புறம் ஒருபிடி சாதம் கூட சாப்பிட மாட்டோமில்ல... அப்படித்தான்.''
''பேசினது போதும். எழுந்திருங்க முதல்ல. குளிச்சிட்டு வாங்க. பூஜை பண்ணிட்டு சாப்பிடலாம். மற்றதை அப்புறம் யோசிக்கலாம்.''
''யெஸ், மகாராணி,'' என்றவன், ரப்பர் பந்து போல் துள்ளி எழுந்தான்.
செ ன்னையிலிருந்து, 'கிரிக்கெட் போர்ட்' சேர்மேன் கூப்பிட்டார்.
''சித்தார்த்?''
''யெஸ், மிஸ்டர் ரங்கநாதன்.''
''நாளை, 'ஈவ்னிங் ரிசப்ஷன்' வெச்சிருக்கு. எல்லாரும் வர ஏற்பாடு பண்ணியிருக்கோம். 'மேட்ச்' மாதிரியே, 'ப்ரீ' அனுமதி கூப்பன் தந்திருக்கோம். வரப் போற; 'பிளேயர்ஸுக்கு பெவிலியன் என்ட்ரி' ரசிகர்களுக்கு வாலாஜா ரோட், 'என்ட்ரி'ன்னு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கு. நீங்க எப்ப வர்றீங்க?''
''இன்னைக்கு கிளம்பிடறேன், சார். 'நைட்' அங்கே தான்.''
''தேங்க்யூ.''
மொபைல் போன் அணைக்கப்பட்டது.
''சென்னை போறோமா?'' என்று கேட்டாள், நித்யா.
''ம்... 'கிரிக்கெட் போர்ட்' சேர்மேன் ரங்கநாதன் போன் பண்ணிட்டார்.''
''கிளம்ப வேண்டியது தானே!''
''ஆம், சென்னை ரசிகர்கள் என்னை மட்டுமல்ல, கிரிக்கெட்டை நேசிப்பவர்கள். 'கிரவுண்ட்ல' விளையாடுறது யாரா இருந்தாலும், நல்லா விளையாடுனா ஆரவாரிப்பாங்க. சென்னை ரசிகர்கள் ரத்தத்துலேயே கிரிக்கெட் கலந்திருக்குன்னு நினைக்கிறேன். அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக நான் போயே ஆகணும். கிளம்பு, நித்யா. நான், 'ஏர்போர்ட்டு'க்கு போன் பண்ணி, 'பிளைட் கிளையரன்ஸ்' பற்றின விபரங்கள் கேட்டுக்கறேன்.''
''திரும்பவும், 'பிளேன்'லயா போறோம்?''
''போறது மட்டுமல்ல. இந்த முறை நான் தான் பைலட். உன்ன உட்கார வெச்சு ஓட்டுறது ரொம்ப, 'த்ரில்லிங்கா' இருக்கும்.''
''உங்களுக்கு, 'த்ரில்' எனக்கு பயம்.''
''ஏய் என்ன பயம்? நீ தான் ஒருமுறை, 'பிளேன்'ல டிராவல் பண்ணிட்ட இல்ல?''
''நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?''
''சொல்லுங்க, மகாராணி!''
''நீங்க இந்த, 'பிளேன்' ஓட்டற விஷயத்தை மட்டும் மறந்திடுங்க.''
''ஏன் அப்படி சொல்ற?''
''எனக்கு பயமா இருக்கு.''
''என்ன பயம்?''
''ரொம்ப, 'ரிஸ்க்'ன்னு தோன்றது.''
''எதுல தான், 'ரிஸ்க்' இல்ல? ரோட்டுல, கார்ல போனாக் கூடத்தான், 'ஆக்சிடென்ட்' ஆகுது. 'பிளேன்'ல போறது தான், 'ரிஸ்க்' இல்லாத விஷயம். வானத்துல 'டிராபிக்' கிடையாது.''
''இதெல்லாம் எனக்கு வேண்டாம். 'பிளேன்' ஓட்ட மாட்டேன்னு எனக்கு வாக்கு கொடுங்க.''
- தொடரும்
இ.ரங்கநாயகி
