sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சூரசம்ஹாரம்!

/

சூரசம்ஹாரம்!

சூரசம்ஹாரம்!

சூரசம்ஹாரம்!


PUBLISHED ON : அக் 26, 2025

Google News

PUBLISHED ON : அக் 26, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக., 27 - சூரசம்ஹாரம்

அரக்கன் சூரபத்மனை, உலக நன்மைக்காக முருகப் பெருமான் அழித்த நன்னாள் தான், கந்த சஷ்டி திருவிழாவான சூரசம்ஹாரம். இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நடைபெறும்.

முருகப்பெருமான், அசுரரான சூரபத்மனை வதம் செய்த திருவிளையாடலையே நாம், கந்தசஷ்டி விரத விழாவாக கொண்டாடுகிறோம்.

சூரபத்மன், ஒரு பாதி, 'நான்' என்ற அகங்காரமும், மற்றொரு பாதி, 'எனது' என்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன்.

பிரம்ம தேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்களுள், தக்கன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, பல வரங்களைப் பெற்றிருந்தான்.

வரத்தின் வலிமையை பெற்றதால், சிவனை மதியாது யாகம் செய்து, சிவனால் தோற்றுவிக்க பெற்ற, வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.

காசிபனும் கடுந்தவம் புரிந்து, சிவனிடம் இருந்து மேலான சக்தியை பெற்றான்.

ஒருநாள், அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப் பெறுபவர்) ஏவப்பட்ட, மாயை எனும் அரக்கப் பெண் மீது, மையல் கொண்டு, தான் பெற்ற தவ வலிமையை இழந்தான்.

இதைத்தொடர்ந்து, காசிபனும், மாயை எனும் அசுரப் பெண்ணும் இணைந்து, மனிதத் தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானை முகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசுமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளை பெற்றனர்.

இவர்களுள் சூரபத்மன், சர்வ லோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளை பெற எண்ணி, சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று, சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு சக்தியாலும், அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக, சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி, அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.

சூரபத்மன், பதுமகோமளை எனும் பெண்ணை மணந்து, வீரமகேந்திரபுரியை ஆண்டு வரும் காலத்தில், பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், வச்சிரவாகு ஆகிய புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம், மூவாயிரம் பேரும் பிறந்தனர்.

சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு, இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து, அதர்ம வழியில் ஆட்சி செய்தான்.

அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களை காப்பாற்ற திருவுள்ளம் கொண்டு, சூரபத்மனை அழிக்க, சக்தி படைத்த ஆறுமுகனை அவதரிக்க செய்தார்.

ஆறுமுகம் கொண்ட முருக பகவானே, சூரபத்மனை அழித்து உலகில் உள்ள தேவர்களையும், மக்களையும் காத்த நாளையே நாம், சூரசம்ஹாரம் விழாவாக கொண்டாடுகிறோம்.

தொகுப்பு: சுதிக்ஷா






      Dinamalar
      Follow us