PUBLISHED ON : அக் 05, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல் போனால் சொல் போச்சு என்பர். ஆனால், பற்கள் இல்லாதவர்களுக்கு செயற்கையாக பற்களை வளர்க்க முடியும் என, கண்டு பிடித்துள்ளனர், பல் ஆராய்ச்சியாளர்கள்.
ஜப்பான் நாட்டின், கியோட்டா புகுயி பல்கலைக்கழக, பல் ஆராய்ச்சியாளர்கள், பற்களை வளர்க்கும் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளனர். எலி போன்ற உயிரினங்களில் மருந்து செலுத்தி சோதனை செய்துள்ளனர்.
வரும், 2030ல், இந்த அதிசய மருந்தை சந்தைக்கு கொண்டு வர உள்ளதாக கூறுகின்றனர். இனி, பல் போனாலும் சொல் இழக்க வேண்டாம்.
ஜோல்னாபையன்