PUBLISHED ON : ஜூன் 21, 2026

ஜூன் 21 சர்வதேச யோகா தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி, உலகம் முழுவதும், சர்வதேச யோகா தினம் மிகுந்த உற்சாகத்துடனும், ஆரோக்கிய விழிப்புணர்வுடனும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரியக் கொடை, யோகக்கலை. இந்த தினம், யோகாவின் மகத்துவத்தை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கும், அதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2014ல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் விடுத்த அழைப்பை ஏற்று, 2015ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
'யோகா' என்ற சொல்லுக்கு ஒருங்கிணைப்பு என்று பொருள். இது, உடல் மற்றும் உணர்வு ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்த, உடல், மனம் மற்றும் ஆத்மாவை ஒன்றிணைக்கும் கலையாகும். யோகாவும், தியானமும் இரட்டையர்கள் எனச் சொல்லும் அளவுக்கு நெருங்கிய தொடர்புடையவை.
மேலும், யோகாவானது ஆன்மிகம், மெய்ஞானம் மற்றும் பிரபஞ்ச ஆற்றல் ஆகியவற்றோடும் தொடர்புடையது.
யோகாவில் இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. ஒன்று, ஹதயோகா எனப்படும் உடற்பயிற்சி யோகா. இரண்டாவது, க்ரியா யோகா எனப்படும் மூச்சுப் பயிற்சி அடிப்படையிலான தியானம் கலந்த யோகா.
யோகா என்பது வெறும் பயிற்சி மட்டுமல்ல; அது ஒரு முழுமையான வாழ்க்கை முறை.
யோகா பயிற்சிகள் ஒருவருக்கு எண்ணற்ற உடல், மன நலப் பலன்களை வழங்குகின்றன. அவை:
1.உடல் வலிமை:
யோ காசனங்கள் தசைகளையும், எலும்புகளையும் வலுப்படுத்துகின்றன, உடலின் வளைவுத்தன்மையை அதிகரிக்கிறது. இது முதுகு வலி மற்றும் மூட்டுப் பிரச்னைகளைக் குறைக்க உதவுகிறது.
2.மன அழுத்தம் குறைப்பு:
பி ரா ணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்துகின்றன. இது பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.
3.செரிமான மேம்பாடு:
சி ல ஆசனங்கள் செரிமான மண்டலத்தை சீராக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம் படுத்தி, உடல் எடையைச் சமநிலையில் வைக்க உதவுகின்றன.
4.நோய் எதிர்ப்பு சக்தி:
யோ கா சீரா ன ரத்த ஓட்டத்தை உறுதி செய்வதால், உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
யோகாவை ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், அதை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக, நடைமுறை படுத்த வேண்டும். தினமும் குறைந்தபட்சம், 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆசனங்கள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகளைச் செய்வது, உடலின் ஆற்றல் மட்டத்தை உயர்த்தி, நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும்.
யோகாவுக்கு வயது வரம்பு இல்லை; சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், தங்கள் உடல் திறனுக்கு ஏற்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
யோகா என்பது சிகிச்சை முறை அல்ல; அது, நோய்கள் வராமல் தடுக்கும் கவசம். உடலும், மனமும் ஒன்றிணைந்து வா ழும் ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் யோகாவை தினசரி பழக்கமாக மாற்றுவோம்.
ஆறாம் தம்புரான்
