தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!

1


PUBLISHED ON : அக் 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காமராஜர் தமிழக முதல்வராக இருந்தபோது, ஒரு நாள், வீட்டினுள் அமர்ந்திருந்தார். அப்போது அவர் வீட்டு வாசலில் சாதாரண லுங்கி மற்றும் அழுக்கு சட்டையுடன், ஒருவர் நின்றிருந்ததைப் பார்த்தவர்...

'யார் அவர்? என்னன்னு கேளுங்க...' என்றார், காமராஜர்.

அந்நபர், காமராஜரிடம் பேச வேண்டும் என்று சொல்ல... உள்ளே அழைத்து வந்தனர்.

அவர் காமராஜரிடம், 'ஐயா, நான் ரிக்ஷா ஓட்டுறேன். என் மகளை ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். இப்ப, கல்லுாரில சேர்த்துட்டேன். கல்லுாரியில், 16 ரூபாய், 'பீஸ்' கேக்கறாங்க. ரெண்டு நாள்ல கட்டணும். எனக்கிட்ட அவ்வளவு ரூபாய் இல்லீங்க, எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. உங்ககிட்ட கேட்டா ஏதாவது தீர்வு கிடைக்கும்ன்னு எல்லாரும் சொன்னாங்க. அதான் வந்தேன்...' என்றார்.

இன்றைய மதிப்பிற்கு, அத்தொகை, ஆயிரம் ரூபாய் இருக்கும்.

தன் உதவியாளரை அழைத்து, அந்நபரிடம், 16 ரூபாய் கொடுக்க சொன்னார், காமராஜர்.

அதற்கு, 'ஏங்க, அவர் யாரு என்னன்னு தெரியுமா? நீங்க பாட்டுக்கு, 16 ரூபாய் கொடுக்க சொல்றீங்க. அவர் ஏமாத்துறவரா இருந்தா என்ன பண்ணுவீங்க...' என்றார், உதவியாளர்.

'ஒரு மனிதனைப் பார்த்தா தெரியாதா, கொடுத்தனுப்பு...' என்றார், காமராஜர்.

ஒரு வாரம் சென்ற பிறகு, அதே நபர், காமராஜர் வீட்டு வாசலில் மீண்டும் வந்து நின்றார். இதை பார்த்த உதவியாளர், காமராஜரிடம் சென்று, 'நான் தான் சொன்னேனல்லவா, அவன் ஏமாற்றுக்காரன் என்று. இன்னைக்கு வேற ஏதாவது காரணம் சொல்லிகிட்டு வந்திருப்பான்...' என்று கூறினார்.

அந்நபரை உள்ளே வரச்சொன்னார், காமராஜர்.

அவர் வந்து, காமராஜரை வணங்கி, 'ஐயா போன வாரம் வந்தேங்க. என் பிள்ளைக்கு, 'பீஸ்' கட்ட, 16 ரூபாய் கொடுத்தீங்க...' என்றார்.

'ஆமாம், கொடுத்தேன். இப்ப என்ன அதுக்கு?' என்றார், காமராஜர்.

'இல்லைங்க ஐயா, நான் 'பீஸ்' கட்ட போனேன். கல்லுாரியில், 'பீஸ்' 14 ரூபாய் தான் என்று சொல்லி மீதம், ரெண்டு ரூபாய் கொடுத்தாங்க...' என்று 'பீஸ்' கட்டிய ரசீதை காட்டி, 'மீதி ரெண்டு ரூபாயை உங்ககிட்ட கொடுத்துட்டு போவதற்காக வந்தேன், ஐயா...' என்றார், அந்நபர்.

தன் உதவியாளரை, அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்தார், காமராஜர்.

********

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில், தொழிலதிபராகிய அழகப்ப செட்டியாரின், கல்லுாரி வளாகத்தில் இருந்த மாமரத்தின் மீது, மாணவர் ஒருவர் கல்லெறிய, அது மாமரத்தில் படாமல், அங்கிருந்த ஆசிரியர் ஒருவருடைய தலையில் விழுந்தது.

உடனே, அழகப்பரிடம் சென்று, புகார் அளித்தார், அந்த ஆசிரியர்.

அதற்கு, அழகப்பர், 'நம்முடைய கல்லுாரி முழுவதும் மாமரங்களை நடுங்கள்...' என்றார்.

'ஏன்?' என்று ஆசிரியர் கேட்டதற்கு, 'கல்லெறிந்தவனுக்கே பழத்தை ஒருமரம் கொடுக்கிறது என்றால், கல்லுாரியில் உள்ள ஆசிரியர்கள், நம் மாணவர்களுக்கு, எவ்வளவு பாடம் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும்...' என்று கூறினார்.

அன்று இரவு 8:00 மணிக்கு காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், '15 லட்சம் ரூபாய் பணமும், 200 ஏக்கர் நிலமும் கொடுத்தால், நான் ஒரு பல்கலைக்கழகத்தை இந்த ஊரில் தொடங்கி, மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டத்தை கொண்டு வருவேன்...' என்று, பேசினார், முன்னாள் பிரதமர், ஜவஹர்லால் நேரு.

இரவு 9:30 மணிக்கு, 15 லட்சம் ரூபாய் தன் சொந்த பணத்தையும், தன், 200 ஏக்கர் நில பத்திரத்துடன், ஜவஹர்லால் நேரு தங்கியிருந்த இடத்திற்கு சென்று, 'மாணவர்களின் நல்வாழ்வுக்காக ஏதாவது செய்ய வேண்டும்...' என்று, நேருவின் முன் நின்றார், வள்ளல் அழகப்ப செட்டியார்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us