தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : நவ 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஜெர்மன் நாட்டு சர்வாதிகாரி ஹிட்லருக்கு, இத்தாலி நாட்டு சர்வாதிகாரியான, முசோலினி ஒரு தந்தி அனுப்பினார்.

'நிலைமை ரொம்ப மோசம். உணவு அவசரமாக தேவைப்படுகிறது. தயவு செய்து உடனே உணவு பொருட்களை அனுப்பி வையுங்கள்...' என்று தந்தி அனுப்பி இருந்தார்.

தந்தியைப் படித்த, ஹிட்லர், முசோலினிக்கு பதில் தந்தி அனுப்பினார்...

'உணவுப் பொருட்களை தங்களுக்கு ஒதுக்க இயலாமைக்கு வருந்துகிறேன். ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டுக்கும், ரஷ்ய போர் முனைக்கும் தேவைப்படுகிறது. ஆகவே, 'பெல்ட்டை' இறுக்கிக் கட்டிக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறேன்...' என்று பதில் எழுதியிருந்தார்.

அதைப் படித்த, முசோலினி, 'தயவுசெய்து, 'பெல்ட்'டுகளையாவது உடனே அனுப்பி வையுங்கள்...' என்று பதில் தந்தி கொடுத்தார்.

********

கடந்த, 1965ல், புதுடில்லியில் உள்ள கல்லுாரி ஒன்றில் புதிதாகச் சேர்ந்திருந்தான், மாணவன் ஒருவன்.

ஒருநாள், புதிதாக சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்களை ஒவ்வொன்றாக சரிபார்த்துக் கொண்டிருந்தார், கல்லுாரியின் காரியதரிசி.

அப்போது, அதில், ஒரு மாணவனுடைய முகவரி, '10 ஜன்பத்' என்று இருந்தது.

'இது, நம் பிரதமரின் வீட்டு முகவரி ஆயிற்றே...' என்று அவரை திகைக்க வைத்தது. உடனே, அந்த மாணவனின் அப்பாவின் பெயரை பார்த்தார், எல்.பி.சாஸ்திரி என்றிருந்தது. தந்தையின் தொழில் என்ற இடத்தில், அரசுப்பணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

காரியதரிசிக்கு புரிந்துவிட்டது. இவர் பிரதமர், லால் பகதூர் சாஸ்திரியின் மகன். தன், தந்தையின் செல்வாக்கினால் கல்லுாரியில் சேராமல், தன் மதிப்பெண்ணைக் கொண்டு மட்டுமே ஒரு சாதாரண மாணவன் போல் கல்லுாரியில் சேர்ந்திருக்கிறான் என்று.

இந்த அதிசயம் நம் நாட்டில்தான் நடந்துள்ளது.

**********

அமெரிக்க ஜனாதிபதியாக, ரொனால்ட் ரீகன் இருந்தபோது, அவரை பேட்டிக் கண்டார், பத்திரிகையாளர் ஒருவர்.

'மிஸ்டர் பிரசிடென்ட். அமெரிக்காவில் பெண்கள் ஆட்சி ஏற்படுமா?'

'நிச்சயம் ஏற்படாது...' என்று பதிலளித்தார், ரீகன்.

'எப்படி அவ்வளவு திட்டவட்டமாக கூறுகிறீர்கள்?' என்று கேட்டார், பத்திரிகையாளர்.

அதற்கு, 'அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், எந்தப் பெண்ணாவது தனக்கு, 35 வயது நிரம்பிவிட்டதாக கூறுவாளா?' என, சிரித்தபடியே கூறினார், ரீகன்.

ரீகனின் பதிலைக் கேட்டு வாயடைத்துப் போனார், அந்தப் பத்திரிகையாளர்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us