PUBLISHED ON : மே 31, 2026

* அரிசி வடாம் பிழியும்போது மாவில் சிறிது பால் சேர்த்துக் கொண்டால் வடாம் வெள்ளை வெளேரென்று இருப்பதுடன், நன்றாகவும் பொரியும்
* வடாம் செய்வதற்கு மாவை பாத்திரத்திலேயே கிளறாமல், அரிசி மாவுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இட்லி குக்கரில் ஊற்றி, ஐந்து நிமிடம் ஆவியில் வேகவைத்து ஆறவிடவும். அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்தால், மாவு கட்டி இல்லாமல் எளிதாகப் பிழிய வரும்
* வடாம் கூழில் உப்பு அதிகமாகி விட்டால், சிறிது ஜவ்வரிசியை வேகவைத்து கலந்தால் போதும்
* எலுமிச்சம் பழம் அதிகம் பிழிந்தால் வடாம் சிவந்து விடும்
* ஜவ்வரிசி வடாம் கிளறும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால், அவலை பொடித்து அதில் கலந்து விட கெட்டியாகி விடும்
* மோர் மிளகாய் போடும்போது, அதனுடன் பாகற்காயையும் நறுக்கிப் போட்டு வற்றலாக்கலாம். வற்றல் காரம் மற்றும் சிறு கசப்புடன் ருசியாக இருக்கும்
* தர்ப்பூசணியின் தோலைச் சீவி, உப்பு கலந்த தயிரில் ஒருநாள் ஊறவைத்து, பின்பு வெயிலில் காய வைத்து எண்ணெயில் பொரித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்
* தயிருடன் உப்புப் போட்டு அந்தக் கலவையில் கோவைக்காயைப் போட்டு ஊறவிடவும். மறுநாள் எடுத்து வெயிலில் காயவைக்கவும். சூப்பர் வற்றல் ரெடி.
