PUBLISHED ON : மே 10, 2026

அ நிறம் | அளவு
கேரளம் மாநிலம் இடுக்கி அணைக்கட்டு கடந்த, 1979ல், அன்றைய பிரதமர் இந்திராவால் திறக்கப்பட்டது. இதை கட்டுவதற்கு முன், 55 ஆண்டுகள் பூமி ஆராய்ச்சி நடைபெற்றது. அன்று வெள்ளைக்கார பொறியாளர்களுக்கு, காட்டுக்குள் வழிகாட்டியாக செயல்பட்டவர், செம்பன் கொலும்பன் என்ற ஆதிவாசி. அவர் செய்த உதவிக்காக, அவரது கடைசி காலம் வரை மாதாமாதம், 'பென்ஷன்' வழங்கியது, அரசு. 1970ல் இவர் காலமானார். இவருடைய சேவையை பாராட்டி, அணைக்கட்டு முன், இவருடைய முழு உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது.
- ஜோல்னாபையன்
