தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: தேடித் தேடி படியுங்கள்!

விசேஷம் இது வித்தியாசம்: தேடித் தேடி படியுங்கள்!

விசேஷம் இது வித்தியாசம்: தேடித் தேடி படியுங்கள்!


PUBLISHED ON : அக் 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்., 19 - சரஸ்வதி பூஜை

பாரத தேசம் என்றாலே, புண்ணிய நதிகளின் கூட்டாகத்தான் தெரியும். கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, கோதாவரி, நர்மதை, காவிரி, தாமிரபரணி என, அதன் பட்டியல் நீளும். இந்த நதிகளிலெல்லாம் நாம் மூழ்கி எழுகிறோம். ஆனால், புராணங்களில் மட்டுமே நாம் படித்த, சரஸ்வதி நதி மட்டும் பூமிக்குள் மறைந்து விட்டது என்கின்றனர். இதன் ரகசியம் என்ன?

உத்தரகாண்ட் மாநிலத்தில், ஒரு காலத்தில், இமயமலையிலுள்ள, கார்வால் பந்தர்பஞ்ச் சிகரத்தில் இந்த நதி உற்பத்தியாகி, குஜராத் வரை பாய்ந்து கடலில் கலந்ததாம். பந்தர்பஞ்ச் என்றால், குரங்கின் வால் என்று அர்த்தம்.

இலங்கையில், அனுமனின் வாலில் அசுரர்கள் தீ வைக்க, அதை அணைக்க, சரஸ்வதி நதி நீரில், தன் வாலை மூழ்க வைத்து, தீயை அணைத்தாராம், அனுமன். இதனால் தான், இந்த இடத்திற்கு இந்த பெயர் சூட்டப்பட்டது. பிறகு, பூமியில் ஏற்பட்ட பல மாற்றங்களால் இந்த நதி மறைந்து விட்டது என, அறிவியல் கூறுகிறது.

ஆனால், வியாசர், பாரதத்தை இயற்றும் போது, இது எழுப்பிய சத்தம் அதிகமாக இருந்ததால், 'பூமிக்குள் போ...' என, சொல்லி விட்டாராம். பிரம்மா, யாகம் செய்யும் போது, தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில், சரஸ்வதி தேவி நதியாக மாறி, பூமியில் மறைந்ததாகவும் ஒரு கதை உண்டு.

தற்போது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில், இந்த நதி, கங்கை மற்றும் யமுனையுடன் மறைமுகமாக கலந்திருப்பதாக சொல்கின்றனர். எனவே, இந்த இடம் புகழ் பெற்ற புண்ணியத் தலமாக விளங்குகிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு புனித நீராடுகின்றனர்.

சரஸ்வதி நதி மறைந்து போனதற்கு வலுவான காரணம் உண்டு... ஒரு ஆறு வற்றி விட்டால், ஊற்று தோண்டுவர். தோண்டத் தோண்ட முதலில் மணல் தான் வரும். பிறகு, சுவையான நீர் கிடைக்கும். கல்வியும் அப்படித் தான். ஏதாவது ஒரு பொருள் பற்றி படித்துக் கொண்டிருக்கும் போதே, அதில் வரும் ஒரு வார்த்தை பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பும். அவற்றை நிவர்த்தி செய்ய, அது பற்றிய தகவல்களைத் தேடித் தேடி தெரிந்து கொள்ள வேண்டி வரும்; அதற்காக பல இடங்களுக்கு பயணம் கூட செய்யலாம். அங்கே இன்னும் பல கல்வி புதையல்கள் கூட கிடைக்கும்.

இதனால் தான், அவ்வையார், கற்றது கை மண் அளவு என்று, நாம் படித்த கல்வியை மண்ணுக்கு ஒப்பிட்டார். கல்லாதது உலகளவு என்பதால் தான், நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், முழுமையாக எதையும் தெரிந்து கொள்ள முடியாமல் மறைந்து போகிறோம்.

எல்லாம் படித்தவன் என்ற ஆணவம் கூடாது, இன்னும் படிக்க வேண்டியது நிறைய உள்ளது என்ற தத்துவத்தையே, சரஸ்வதி நதியின் மறைவு தெரிவிக்கிறது.

சரஸ்வதி பூஜை நன்னாளில், நம் வாழ்நாள் முழுவதும், பயனுள்ள கல்விச் செல்வத்தை தேடித்தேடி படிக்க உறுதியெடுப்போம்.

— தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us