/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
வடமாநில தொழிலாளர்களால் களைகட்டும் விவசாயம்!
/
வடமாநில தொழிலாளர்களால் களைகட்டும் விவசாயம்!
PUBLISHED ON : நவ 09, 2025

கேரளாவில், ஒருகாலத்தில் வயல் வேலைகளில் ஈடுபட்ட பெரும்பாலானோர், புலயா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது.
இச்சமூகத்தினரில், படித்த இளைஞர்கள் வேறு தொழில் தேடி போனதால், யாரும் சேற்றில் இறங்கி வேலை செய்ய விரும்பவில்லை. முதியவர்களில் சிலர் மட்டும் விவசாயம் செய்து வந்த நிலையில், மீண்டும் விவசாயம் களைகட்டி வருகிறது.
படத்தில் காணப்படுவது, கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள திருத்தாலா கிராமம். இங்கு வேலை செய்பவர்கள் அனைவரும், வடமாநிலத் தொழிலாளர்கள். இவர்களுக்கு, தங்கள் ஊர்களில் ஒருநாள் கூலியாக, 100, 200 ரூபாய் தான் கிடைக்கும். இங்கே ஒரு நாளைக்கு 700, 800 ரூபாய் கிடைப்பதால், நிறைய பேர் விவசாய வேலைக்கு வருகின்றனர்.
- ஜோல்னாபையன்

