PUBLISHED ON : அக் 18, 2026

கருப்புப் பூனை!
தற்சமயம், ராஜா என்ற பொருள் தரும் படத்தில், வம்பு நடிகருடன் நடித்து வரும் அந்த நடிகை, ‘நான் ரொம்ப ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண்...’ என்று சொல்லி, தான் நடிக்கும் படங்களின், ‘ஹீரோ’களுடன் கோடு போட்டு பழகி வந்தார். இதன் காரணமாக, தங்கள் படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்வதை தவிர்த்து வந்தனர், சில முன்னணி நடிகர்கள். இதனால், அம்மணியின், ‘மார்க்கெட்’ குடை சாய்ந்தது.
இந்நிலையில், சினிமாவில் முன்னேறுவதற்கு முன்னணி நடிகர்களின் அரவணைப்பு அவசியம் என்று, அனுபவசாலி நடிகை ஒருவர் அறிவுரை கொடுத்தார். அதை ஏற்று தற்போது நடிக்கும் படத்தில், ‘லிமிட்’ தாண்டி பழக தொடங்கி இருப்பதோடு, படப்பிடிப்பு தளத்தில், சிறிய வாய்ப்பு கிடைத்தாலும், நடிகருடன் பெரிய அளவில் கடலை போடுகிறார்.
இந்த செய்தி, காட்டுத் தீயாய் பரவியதை அடுத்து, இதுவரை நடிகையை ஓரங்கட்டிய சில நடிகர்கள், தங்கள் படங்களுக்கு அம்மணியை, ‘புக்’ செய்து, அவரை கணக்கு பண்ண தயாராகி வருகின்றனர்.
@block_B@கீ ர்த்தி சுரேஷ், கதையின் நாயகியாக, வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள, சத்திwயவான் சாவித்திரி படம், நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.@@block_B@@
@block_B@ப த்தா படத்தில், தேசிய விருது பெறும் அளவிற்கு விஜய் சேதுபதி நடித்திருப்பதாக பாராட்டு தெரிவித்திருக்கிறார், இயக்குநர் ஷங்கர்.@@block_B@@
ஏ ற்கனவே, சென்னை 28 படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குனர், வெங்கட் பிரபு, அடுத்ததாக அதன் மூன்றாம் பாகத்தையும் இயக்கப்போவதாகக் கூறுகிறார்.
த ற்போது, அரசன் மற்றும் மஞ்சணத்தி என்ற இரண்டு தமிழ் படங்களிலும் அழுத்தமான வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை, பிரியங்கா மோகன்.
@block_B@க டந்த, 2017ல் நடிகர் , ஆதி நடித்து வெளியான, மரகத நாணயம் படம் வெற்றியடைந்த நிலையில், தற்போது அப்படத்தின், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது.@@block_B@@
விஜய் சேதுபதிக்கு, ‘ஹாலிவுட்’ வாய்ப்பு கிடைக்குமா?
கடந்த, 2024ல், விஜய் சேதுபதி நடித்து வெளியான, அவரது 50வது படமான, மகாராஜா ‘சூப்பர் ஹிட்’ அடித்த நிலையில், தற்போது, ‘ஹாலிவுட்’ திரைப்பட நிறுவனம் ஒன்று, இப்படத்தின் கதையை ஆங்கில மொழியில் திரைப்படமாக எடுக்க உரிமம் பெற்றுள்ளது. இதன் மூலம், தமிழ் சினிமா உலகிலிருந்து, ‘ஹாலிவுட்’டுக்கு செல்லும் முதல் தமிழ் திரைப்படம், மகாராஜா .
இப்படத்தில், விஜய் சேதுபதி நடித்த வேடத்தில், மேத்யூ மெக்கனாஹி என்ற ‘ஹாலிவுட்’ நடிகர் நடிக்கிறார். இந்நிலையில், ‘ஹாலிவுட்’டில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கும் , விஜய் சேதுபதி, மேற்படி ஆங்கில திரைப்பட நிறுவனத்தை அணுகி, ‘இப்படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில், ஓரிரு காட்சிகளில் வந்தாலும் பரவாயில்லை...’ என்று நடிக்க வாய்ப்பு கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
வில்லனாகும், அசோக் செல்வன்!
தெகிடி படத்தின் மூலம் நடிக்க வந்து, இதுவரை 25 படங்களில் நடித்துவிட்ட போதிலும், இன்னும், தமிழ் சினிமாவில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார், அசோக் செல்வன். இதன் காரணமாக தற்போது, தெலுங்கு நடிகர், நாகார்ஜுனா நடிக்கும் அவரது 100-வது படமான, கிங் 100 என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், அசோக் செல்வன்.
‘நான் இப்படி நடிப்பதற்கு விஜய் சேதுபதிதான் காரணம். தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் வில்லன் வேடத்தில் நடித்து, அவர் தன், ‘மார்க்கெட்’டை உயர்த்தி கொண்டார். அதுபோல் என், ‘மார்க்கெட்’டை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இப்போது வில்லன் வேடங்களைக் கையில் எடுத்திருக்கிறேன். அதன்பின், தமிழில் நான், ‘ஹீரோ’வாக நடிக்கும் படங்களை, மற்ற மொழிகளிலும் வெளியிட்டு பல மொழி நடிகராகப் போகிறேன்...’ என்கிறார், அசோக் செல்வன்.
— சினிமா பொன்னையா
பரபரப்பூட்டும், ஸ்ரீலீலா!
தெலுங்கு சினிமாவில், பாடல்களுக்கு அதிரடி கவர்ச்சி ஆட்டம் போட்டு இளவட்ட ரசிகர்களை ஈர்த்தவர், ஸ்ரீலீலா. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த, பராசக்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர், தற்போது, ஓம் என்ற பல மொழி படத்தில், தனுஷுடன் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில், பரபரப்பைக் கூட்ட வேண்டும் என்பதற்காக, தற்போது, ரஜினியின், தர்மன் படத்தில் ஒரு பாடலுக்கு அதிரடி குத்தாட்டம் போட்டிருக்கிறார். குறிப்பாக, இந்தப் பாடலில், ரஜினியும் தோன்றுவதால், இப்படம் திரைக்கு வரும்போது, தமிழ் சினிமாவில் தன், ‘மார்க்கெட்’ உச்சத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கிறார், ஸ்ரீலீலா.
— எலீசா
விமர்சனங்களுக்கு கவலைப்படாத, கீர்த்தி சுரேஷ்!
சமீபத்தில், தான் நடித்துத் திரைக்கு வந்த, டோரதி என்ற தமிழ் படம் கடுமையான விமர்சனங்களில் சிக்கியபோது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை, கீர்த்தி சுரேஷ். ‘வித்தியாசமாக, தொலைநோக்குப் பார்வையுடன் நாம் எதையாவது செய்தால், இப்படித்தான் விமர்சனங்கள் வரும். அதனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. இதுவரை, ‘ரொமான்டிக்’ படங்களில் நிறைய நடித்துவிட்டேன். அதனால் இனி, மற்ற நடிகையர் நடிக்கத் தயங்கும், கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு முடிவெடுத்திருக்கிறேன். அதற்கு எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை...’ என்கிறார், கீர்த்தி சுரேஷ்.
— எலீசா
