தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளைஞர்களை கவரும், கல்யாணி பிரியதர்ஷன்!

தற்போது, தென் மாநில படங்களில் பரவலாக நடித்து வரும் மலையாள நடிகை, கல்யாணி பிரியதர்ஷன், கல்லுாரி இளைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்றால், முதல் ஆளாக ஆஜராகி விடுகிறார். அதோடு, தான் நடித்த படங்களின், ‘ஹிட்’ பாடல்களுக்கு, அவர்கள் முன் நடனமாடி, கைதட்டும் வாங்குகிறார், கல்யாணி பிரியதர்ஷன்.

அதன் பிறகு, படங்களில், தன்னுடைய நடிப்பு குறித்தும், அவர்களிடம் கருத்து கேட்கிறார். எந்த மாதிரியான கதாபாத்திரங்கள் தனக்கு பொருந்தும் என்று, அவர்களிடம் கேட்டு, ‘உங்கள் விருப்பத்திற்காக எதிர்காலத்தில் அது போன்ற கதாபாத்திரங்களில் கட்டாயமாக நடிப்பேன்...’ என்றும் வாக்கு கொடுத்து வருகிறார்.

—  எலீசா

கமலின், இந்தியன் -3 !

கடந்த, 1996ல், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்த, இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், அவர்களின் கூட்டணியில் வெளியான, இந்தியன் -2 படம் படுதோல்வி அடைந்தது. இதனால், அப்படத்தின் மூன்றாம் பாகத்தை வெளியிடுவதை கிடப்பில் போட்டனர். தற்போது, இந்தியன் -3 படத்தை மீண்டும், துாசி தட்டியுள்ளதால், சேனாபதி கதாபாத்திரத்திற்கு மாற தயாராகி வருகிறார், கமல்ஹாசன்.

—  சினிமா பொன்னையா

நயன்தாரா கொடுத்த, இன்ப அதிர்ச்சி!

கடந்த, 21 ஆண்டுகளாக சினிமாவில் பிசியாக நடித்து வரும், நயன்தாரா, பில்லா படத்தில் நீச்சல் உடையில், நடித்துதான் தன், ‘மார்க்கெட்’டை உச்சத்திற்கு கொண்டு சென்றார். என்றாலும், ஒரு கட்டத்தில் அப்படி நடிப்பதை நிறுத்தினார். இந்நிலையில் தற்போது, ‘மார்க்கெட்’ சற்று, ‘டவுன்’ ஆகிவிட்டதால், மீண்டும் நீச்சல் உடைக்கு மாறி இருக்கிறார்.

ஹிந்தி நடிகர், சல்மான்கானுடன் நடிக்கும், மான்ஸ்டர் என்ற ஹிந்தி படத்தில், ஒரு பாடலில், ‘பிகினி’ உடையில் தோன்றுகிறார். தான், ‘பிகினி’ உடையில் கவர்ச்சியாக இருக்கும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

—  எலீசா

தனுஷ்- – சிவகார்த்திகேயன் கடும் போட்டி!

நடிகர், விஜய் தற்போது முதலமைச்சராகி விட்டதால், ‘கோலிவுட்’டில் அவர் விட்டு சென்ற இடத்தை பிடிப்பதற்கு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தங்களது ரசிகர் வட்டாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அவர்கள், தங்களது படங்கள் வெளியாகும் போது, மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, மேற்படி நடிகர்கள் இருவரும் தங்களது ரசிகர் மன்றங்களை, நற்பணி மன்றங்களாக மாற்றி இருப்பதோடு, இன்னும் நிறைய பேரை தங்களது நற்பணி மன்றங்களுக்குள் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

—  சினிமா பொன்னையா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us