sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விசேஷம் இது வித்தியாசம்: அம்பாளின் வெற்றித்திருவிழா!

/

விசேஷம் இது வித்தியாசம்: அம்பாளின் வெற்றித்திருவிழா!

விசேஷம் இது வித்தியாசம்: அம்பாளின் வெற்றித்திருவிழா!

விசேஷம் இது வித்தியாசம்: அம்பாளின் வெற்றித்திருவிழா!


PUBLISHED ON : அக் 19, 2025

Google News

PUBLISHED ON : அக் 19, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரகாசுரனை, சத்யபாமாவும், கிருஷ்ணரும் இணைந்து அழித்த நாள் தான் தீபாவளி என்ற வரலாறு நமக்கு தெரியும். இந்த விழாவுக்கும், அன்னை பார்வதிக்கும் சம்பந்தம் இருக்கிறது தெரியுமா?

நரகாசுரன் என்ற சொல்லின் தத்துவமே ஆணவம் மற்றும் இருள் என்பது தான். தன் தாயைத் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்க முடியாது என்று, பிரம்மாவிடம் வரம் பெற்றான், நரகன்.

எந்த தாயும் பெற்ற பிள்ளையைக் கொல்ல மாட்டாள் என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால், ஆணவத்தின் உச்சியில் இருந்தான். பெண்களைத் துன்புறுத்தினான். மக்களை படாதபாடு படுத்தினான்.

அவனது தளபதி முரன், தேவலோகத்தைக் கைப்பற்றி, இந்திர பதவியில் இருந்தான். அவன், நரகாசுரனுக்கு தளபதி ஆனான். ஒரு மாவீரன் தன் பக்கம் இருந்ததால், அவனுக்கு மேலும் ஆணவம் ஏற்பட்டது. அவனது ஆட்சியை, மக்கள் இருண்ட ஆட்சியாகவே பார்த்தனர்.

தேவலோகத்துடன் விட்டானா, நரகன், அன்னை பார்வதி, அவன் ஆண்ட பூமியில், காமாக்யா என்ற பெயரில் அருள்பாலித்து வந்தாள். அவளது அழகை ரசித்த, நரகன் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள எண்ணினான். காமாக்யாவுக்கோ பயம். ஏனெனில், அவனுடன் போரிட்டு ஜெயிக்க இயலாதே!

எனவே, தந்திரத்தால் அவனை வெற்றி கொள்ள எண்ணினாள்.

'நரகனே! நான் நிலச்சல் குன்றில் வசிக்கிறேன். இந்த குன்று எவ்வளவு உயரமானது என்பதை நீ அறிவாய் (இப்போதைய உயரம் 800 அடி). நீ, வீரன் என்பது உண்மையானால், ஒரே இரவில் என் மலைக்கு வர, நீ படிக்கட்டுகளை அமைக்க வேண்டும். காலை சேவல் கூவும் முன், பணியை முடித்து விட்டால் உன்னை மணந்து கொள்கிறேன்...' என்றாள்.

நரகனும் சம்மதித்தான். பணிகள் வேகமாக நடந்தன. சேவல் கூவும் முன்பே ஏறத்தாழ பணி முடியும் நிலை இருந்தது. அப்போது, ஒரு தந்திரம் செய்தாள், காமாக்யா. ஒரு மாய சேவலை உருவாக்கி கூவும்படி செய்தாள். நரகன் மிக வருத்தப்பட்டான்.

பணியை பாதியில் விட்டு விட்டு அரண்மனைக்கு திரும்பும் வழியில் விடிந்ததற்கான அறிகுறி தெரியவில்லை. எனவே, அவன் தன் பணிக்கு இடையூறாக இருந்த மாய சேவலைக் கொன்றான். படிக்கட்டு பணியில் தோற்றதால், அவன் காமாக்யாவை மணந்து கொள்ள முடியாமல் போனது.

நரகனை, காமாக்யா தேவி வெற்றி கொண்டு, அவனது ஆணவத்தை அழித்த நாளே, தீபாவளி.

நரகாசுரன் கோழியைக் கொன்ற இடம், 'குக்குரகட்டா' என்ற பெயரில் இன்றும் அசாமில் இருக்கிறது. அசாமிய மொழியில், 'குக்குர' என்றால், சேவல்.

இந்த கிராமத்தில் தற்போது 2,000 பேர் வசிக்கின்றனர். கவுகாத்தி, காமாக்யா கோவிலில் இருந்து 85 கி.மீ., துாரத்தில் இவ்வூர் உள்ளது.

தி. செல்லப்பா






      Dinamalar
      Follow us