தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: இனிமையாக பேசுவோம்!

விசேஷம் இது வித்தியாசம்: இனிமையாக பேசுவோம்!

விசேஷம் இது வித்தியாசம்: இனிமையாக பேசுவோம்!


PUBLISHED ON : செப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்.,20 - அதுக்க நவமி

'அ துக்க நவமி' என்று ஒரு விரதம். அதிகம் கேள்விப்படாத ஒன்று.

அதுக்கம் என்றால் என்ன?

நீதி என்றால், நியாயம். அதன் முன், 'அ' சேர்த்தால், அநீதி. இதே போல, துக்கம் என்றால், கஷ்டம் அல்லது சோகம் என, பொருள். இதன் முன், 'அ' சேர்த்து அதுக்கம் என்றால், இன்பம். மனதிற்கு இன்பத்தை தரும் விரதம், அதுக்க நவமி. இது, துர்க்கையை நினைத்து அனுஷ்டிக்கும் விரதம். ஆவணி மாதம் வளர்பிறை நவமியன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.

ஒருவரது மனம், ஏழ்மை, குழந்தையின்மை, நோய் போன்ற எந்தவொரு காரணிகளாலும் கூட துக்கப்படாது. ஆனால், ஒருவர் தவறாகப் பேசி விட்டால், மனம் படாத பாடுபடும். நாக்கு பேசும் சுடு சொற்களுக்கு, அந்தளவு சக்தி உண்டு.

இவ்வாறு பிறரைத் துக்கப்படுத்தினால் என்னாகும் தெரியுமா? ஏழேழு ஜென்மங்களையும் கடந்து பாவம் தொடரும். அதன்பின் எடுக்கும் பிறவிகளிலும், வரக்கூடாத நோய்களெல்லாம் வந்து பாடாய் படுத்தும்.

சுடுசொல் பேசியவர் மட்டுமின்றி, அவரது சந்ததியினரையும் அந்த பாவம் தொடரும்.

இதற்கு தீர்வு தான் என்ன?

அதுக்க நவமி விரதத்தை கடைபிடித்து, துர்க்கையின் திருவடிகளில் விழுவது தான். தன் திருவடிகளின் மகிமை குறித்து, துர்க்கையே கூறியுள்ள ஒரு வரலாறைக் கேளுங்கள்...

மதுரா சிறையில் பிறந்தான், கண்ணன். கம்சனால், தன் பிள்ளைக்கு ஆபத்து வரும் எனக் கருதிய தந்தை, வசுதேவர், குழந்தை கண்ணனை, தன் நண்பர், நந்தகோபரின் இல்லத்தில் விட்டு, நண்பரின், பெண் குழந்தையை மதுராவுக்கு எடுத்து வந்து, தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறந்துள்ளது, என்று கம்சனிடம் கூறினார், வசுதேவர். இருந்தாலும், கம்சன் விடவில்லை. அந்தக் குழந்தை மாயை என்கிற துர்க்கை என்ற விஷயம் கம்சனுக்கு தெரியாது. அவன், குழந்தையின் கால்களைப் பிடித்து சுழற்றி மேல் நோக்கி வீசினான்.

அந்தக் குழந்தை துர்க்கையாக மாறி, சூலத்துடன் வானில் நின்றது.

'ஏ கம்சா! உன்னை அழிக்கப் பிறந்தவன் வேறு இடத்துக்கு போய் விட்டான். இப்போது என்னால் கூட உன்னை அழிக்க முடியும். ஆனால், நீ, என் திருவடிகளைப் பிடித்து சுழற்றி மேலே எறிந்தாய். நோக்கம் தவறாக இருந்தாலும், என் திருவடிகளைப் பிடித்தவர்களை நான் அழிப்பதில்லை...' என்று சொல்லி மறைந்து விட்டாள், இப்போது புரிகிறதா, துர்க்கையின் திருவடி மகிமை!

நமக்கு வேண்டியவர்களோ, வேண்டாதவர்களோ...அவர்களை சுடுசொற்களால் பேசக்கூடாது. கண்டிப்பில் கூட கவனம் வேண்டும். ஆனால், மனிதன் எத்தனையோ முறை பிறர் மனம் புண்படும்படி பேசத்தான் செய்கிறான்.

அவர்கள் இந்த அதுக்க நவமி நாளில் இருந்தாவது, தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுவரை பேசிய பேச்சுக்காக, துர்க்கையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனி, இனிமையாக பேசுவதற்கும் உறுதியெடுக்க வேண்டும்.

 தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us