தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விசேஷம் இது வித்தியாசம்: குழந்தை வழிபாடு

விசேஷம் இது வித்தியாசம்: குழந்தை வழிபாடு

விசேஷம் இது வித்தியாசம்: குழந்தை வழிபாடு


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்., 11 நவராத்திரி ஆரம்பம்

உலகிலேயே உயர்ந்த குணம், தாய்மை. ஆனால், அந்த தாய்மையே மண்டியிடுவது குழந்தை குணத்தின் முன் தான். இதனால் தான், அன்னை பராசக்தி இந்த பூமியில் பலமுறை குழந்தையாக அவதாரம் செய்திருக்கிறாள்.

மகாலட்சுமி தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என, வேண்டினார், பிருகு முனிவர். லட்சுமியும் அதை நிறைவேற்றினாள். பிருகுவின் மகள் என்பதால், பார்கவி எனப்பட்டாள்.

பார்வதிதேவி, தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என, ஆசைப்பட்டார், காத்யாயன முனிவர். அவரது மகள் என்பதால், காத்யாயனி என, பெயர் பெற்றாள், அம்பாள்.

காஞ்சனமாலையின் வேண்டுதலை நிறைவேற்ற, மீனாட்சியாகவும் பூமியில் பிறந்தாள், பார்வதி தேவி. இதனால் தான், நாம் நவராத்திரியின் போது, சின்னக் குழந்தைகளை அலங்கரித்து அம்பாளாகக் கருதி வழிபாடு செய்கிறோம். இதை, கன்யா பூஜை என்பர்.

ஏன் அம்பாள் குழந்தையாக பூமியில் பிறக்க வேண்டும்?

குழந்தையின் கையில் எவ்வளவு விலை மதிப்புள்ள பொருளைக் கொடுத்தாலும் சரி, சிறிது நேரம் விளையாடி விட்டு கீழே போட்டு விடும். அதை, திரும்ப எடுத்துக் கொடுத்தாலும், அதன் மேல் அதற்கு நாட்டம் வராது. குழந்தை ஏதாவது காரணத்தால் அழும். ஆனால், அந்த அழுகையும் சிறிது நேரமே. ஆனால், பெரியவர்கள் என்ன செய்வர்? விலை மதிப்புள்ள பொருளை பூட்டி வைத்து விட்டு, காவல் இருப்பர். அதன் மேல் தீராத ஆசை இருக்கும்; தொலைந்து விடக்கூடாதே என்ற கவலை இருக்கும். ஒரு நகையை வெளியில் அணிந்து செல்லும்போது, ஆணவமும் தலை துாக்கும். இந்த குணங்கள் எதுவுமே குழந்தையிடம் கிடையாது. அதற்கு சோகமும் சொந்தமில்லை, மகிழ்ச்சியும் சொந்தமில்லை. எதன் மீதும் பிடிப்பில்லை.

அந்த குழந்தை குணம் நம்மையும் தொற்ற வேண்டும் என்பதற்காகத் தான், அம்பாள் பலமுறை குழந்தையாக அவதாரம் எடுத்திருக்கிறாள். இதனால் தான், நவராத்திரி காலத்தில் குழந்தைகளை அலங்கரித்து அவர்களை அம்பாளாகக் கருதி பூஜை செய்ய கூறினர், பெரியவர்கள்.

அன்னை பராசக்தி, ஒன்பது வயது குழந்தையாக பூமியில் பிறந்தாள். அவளுக்கு, 'பாலா' என்று பெயர். இவளை, வாலை என்று சொல்வர். வாலை என்றால், சிறுமி. தோற்றத்தில் சிறுமி என்றாலும், உலகையே இயக்கும் சக்தி இவளுக்குள் இருக்கிறது. பாலாவை வழிபட்டால், பக்தனின் மனமும் குழந்தை போல் மென்மையாகி விடும்.

கிருஷ்ணர் பிறந்தபோது, அவருடன் அம்பாளும் பிறந்தாள். இவளை, பவானி என்பர். பவானி என்றால், உயிர் கொடுப்பவள் என, பொருள். கண்ணனின் உயிர், கம்சனால் பிரிய இருந்த சூழலில், அவனது உயிர் காத்தவள், பவானி தான்.

நவராத்திரி விழா காலத்தில் குழந்தைகளை ஆராதிப்போம். குழந்தை மனம் வேண்டும் என, அம்பாளிடம் பிரார்த்திப்போம்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us