
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் இருப்பது, நீலகிரி மலைவாழ் மக்களான தோடர்களின் கோவில். இக்கோவில், 'போளி வோஷ்' என அழைக்கப்படுகிறது. இவர்களை, தோடர் என அழைத்தாலும் அவர்கள் தங்களை, 'ஹோள்' என்று கூறிக் கொள்கின்றனர். தோடர் மொழியில், 'ஹோள்' என்றால் மனித குலம் என்று பொருள்.
இவர்கள் ரோம் மற்றும் கிரேக்க நாட்டில் இருந்து வந்தததாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை இவர்கள் அங்கீகரிக்கவில்லை. 'நாங்கள், இங்கு வசிக்கும் பூர்வீக மக்கள்...' என்கின்றனர்.
இவர்களது கோவில்களில் கடவுள்களின் உருவங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இஷ்ட கால்நடையான எருமை பாலில் இருந்து தயாரிக்கும் நெய்யை, கோவிலில் படையல் இடுகின்றனர்.
— ஜோல்னாபையன்